இந்த ஆண்டுக்கான தீபாவளி கொண்டாட்டத்துக்கு மக்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் 12 நாட்கள் மட்டுமே தீபாவளிக்கு இருக்கிறது. அதாவது அக்டோபர் 31 ஆம் தேதி வியாழக்கிழமை தீபாவளி வருகிறது. இதனையொட்டி வெளியூர்களில் இருப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான திட்டமிடலை எல்லாம் ஏற்கனவே செய்து வைத்துவிட்டனர். தமிழ்நாடு அரசும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த சூழலில் தீபாவளிக்கு போனஸ் லீவு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏனென்றால் தீபாவளி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. அடுத்த நாள் வெள்ளிக் கிழமை.
மேலும் படிக்க | தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் உத்தரவு வந்தாச்சு
அதன்பிறகு சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை. இடையே இருக்கும் இந்த ஒருநாள் மட்டும் அரசு விடுமுறை அறிவித்தால், வெளியூர் செல்பவர்கள் ஊருக்கு செல்வதற்கு இன்னும் கொஞ்சம் மகிழ்ச்சியாக தயாராவார்கள். அரசுக்கும் இது குறித்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் சார்பில் தீபாவளிக்கு அடுத்த நாளான வெள்ளிக்கிழமை விடுமுறை விடுமாறு கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது. அரசு செயலாளர்கள் முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்ற பிறகு தீபாவளி போனஸ் விடுமுறை குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இந்த அறிவிப்பு வெளியானால் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ச்சியாக 4 நாட்கள் அரசு ஊழியர்களுக்கு லீவு கிடைக்கும்.
ஏற்கனவே தமிழ்நாடு அரசு குரூப் சி மற்றும் டி ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துவிட்டது. முதலமைச்சர் இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில், குரூப் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படும் என்றும், கருணைத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்தார். லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு இந்த போன்ஸ், மற்றவர்களுக்கு 10 விழுக்காடு போனஸ் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் இந்த ஆண்டும் தீபாவளி சிறப்பு பேருந்து இயக்கப்படும். விரைவில் எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து எவ்வளவு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை சார்பில் அறிவிப்பு வெளியாக இருக்கிறது. சென்னையில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், கேளம்பாக்கம், மாதவரம், கேகேநகர் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும் படிக்க | ஹேப்பி நியூஸ்.. புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அரசு அதிரடி அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ