வரும் 2019 மக்களவை தேர்தலையொட்டி திமுக தலைமையில் கூட்டணி இறுதி முடிவாகி உள்ளது. தமிழகத்தை பொருத்த வரை அதிமுக மற்றும் திமுக தலைமையில் கட்சிகள் கூட்டணி அமைத்து வருகின்றனர். சில கட்சிகள் தனியாகவும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளன.
தற்போதைய நிலவரப்படி திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு கிட்டத்தட்ட இறுதி முடிவாகி உள்ளது. கடந்த சில தினங்களாக தனது தோழமை மற்றும் கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து திமுக நிர்வாகிகள் பேசி வந்தனர். இன்று அனைத்து கட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்ட தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டன. அதில் அனைத்து கட்சிகளும் 21 சட்டசபைக்கு இடைத்தேர்தல் நடைபெற்றால் திமுகவுக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்துள்ளனர். இதில் எத்தனை கட்சிகள் திமுக சின்னத்தில் போட்டியிடும் என்று இறுதி முடிவு செய்யவில்லை. அதுக்குறித்து ஓரிரு தினங்களில் முடிவாகும் எனத் தெரிகிறது.
இந்தநிலையில், வரும் மக்களவை தேர்தலில் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. மனித நேய மக்கள் கட்சிக்கு இடம் ஒதுக்கவில்லை. யார் எந்த தொகுதி ஒதுக்குவது என இரண்டு நாட்களில் முடிவு செய்யப்படும். கூட்டணி கட்சிகள் திமுக சின்னத்தில் போட்டியிடுவது என்பது அந்தந்தந்த கட்சிகள் தான் முடிவு செய்யவேண்டும். கூட்டணிப் பேச்சுவார்த்தை முழுமையாக முடிவடைந்து உள்ளது எனக் கூறினார்.