EWS Reservation : 10% இடஒதுக்கீடு தீர்ப்பின் மீது உச்ச நீதிமன்றத்தில் திமுக சீராய்வு மனு தாக்கல்

முற்பட்ட சமூகத்தினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசின் முடிவை உறுதி செய்த தீர்ப்பை எதிர்த்து திமுக உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தது.

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 5, 2022, 02:54 PM IST
EWS Reservation : 10% இடஒதுக்கீடு தீர்ப்பின் மீது உச்ச நீதிமன்றத்தில் திமுக சீராய்வு மனு தாக்கல் title=

அரசு வேலைகளில் முற்பட்டவகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த நவ. 7ஆம் தேதி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது. அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதபதி யூயூ லலித் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு நடத்திய விசாரணையில், 3 பேர் 10 சதவீதம் இடஒதுக்கீடு செல்லும் என்றும், அதற்கு எதிராக இருவரும் தெரிவித்திருந்தனர். நீதிபதிகள் யுயு லலித், ரவீந்திர பட் ஆகியோர் 50 சதவீத இடஒதுக்கீடு என்ற வரம்பை இந்த முற்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு மீறும் என்பதை காரணமாக வைத்து அதற்கு ஆதரவு அளிக்க மறுத்தனர். 

இருப்பினும், மீதமிருந்த மூவரும் 10 சதவீத இடஒதுக்கீடு அரசியல் சாசன அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை எனக்கூறி அதற்கு ஆதரவு தெரிவித்ததால், அந்த இடஒதுக்கீடு செல்லுபடியாகும் என தீர்ப்பானது. 

மேலும் படிக்க | EWS Reservation Verdict: 100 ஆண்டுகள் போராட்டத்தில் பின்னடைவு... தமிழ் மண்ணின் சமூக நீதி குரல் தொடரும் - ஸ்டாலின்

2019ஆம் ஆண்டு மத்திய அரசு இந்த ஒடஒதுக்கீட்டை வைத்து, கொண்ட வந்த சட்ட திருத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. அந்த வழக்குகளின்கீழ் நவ. 7ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. 

அந்த வகையில், உச்ச நீதிமன்றத்தில் நவ. 7ஆம் தேதி தீர்ப்பை பல்வேறு தரப்பினர் கேள்விக்குட்படுத்தினர். குறிப்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றே கருத வேண்டியுள்ளது என்று கருத்து தெரிவித்திருந்தார். 

தொடர்ந்து, இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் நடந்த ஆலோசையின்படி, இந்த விவகாரம் குறித்து சீராய்வு மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருந்தது. அந்த கூட்டத்தில், அதிமுக, பாஜக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. 

இந்நிலையில், முற்பட்ட சமூகத்தினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டில் மத்திய அரசின் முடிவை உறுதி செய்த தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பாக உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. '10 சதவீத இடஒதுக்கீட்டு வழக்கின் தீர்ப்பால் 133 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினரை புறந்தள்ளிவிட்டு கொடுக்கப்படும் இந்த இட ஒதுக்கீடு பாகுபாடானது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது' என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | உயர் சாதியினருக்கும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு சரியே! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News