அரசு போடும் அவதூறு வழக்குகளை சந்திக்க தயார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்....
சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள MP, MLA-களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் DMK தலைவரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின் இன்று ஆஜரானார். அவர் முதல் முறையாக இந்த நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார். எனவே நீதிமன்றத்தில் தி.மு.க தொண்டர்கள் கூடியிருந்தனர். இதனால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த 7 அவதூறு வழக்குகள் மீதான விசாரணையில் ஸ்டாலின் தற்போது ஆஜராகினார்.
இதையடுத்து, திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதிமுக ஆட்சிக்காலத்தில் என் மீது 7 அவதூறு வழக்குகள் போடப்பட்டன. தமிழக அரசின் அவதூறு வழக்குகளை எந்த சூழ்நிலையிலும் சந்திக்க தயாராக உள்ளோம்.
வழக்கு 1: FIR, என்பதற்கு பிராடு இன்பர்மேஷன் ரிபோர்ட் என நான் விளக்கம் கூறினேன். அதற்காக ஒரு வழக்கு போட்டனர்.
வழக்கு 2: செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் பலர் இறந்தனர். இதற்கு காரணம் அ.தி.மு.க., ஆட்சி தான் என நான் கூறினேன். மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தும் இந்த அரசு அலட்சியமாக இருக்கிறது என்று கூறினேன். இந்த வழக்கில் ஆஜரான பரணிகுமார், 'ஸ்டாலின் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.
வழக்கு 3: அமைச்சர் உதயகுமார், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் நிலைமையை எடுத்து கூறவில்லை' என, தெரிவித்தார். ஆனால், என் மீது வழக்கு போடப்பட்டது.
வழக்கு 4: சென்னையில் காலரா நோய் பரவிய போது நான் பேசிய பேச்சுக்கு ஒரு அவதூறு வழக்கு.
வழக்கு 5: ஜெயலலிதா கொடநாடு போனது குறித்து நான் பேசியது குறித்து ஒரு மான நஷ்ட வழக்கு.
வழக்கு 6: சட்டசபையில் மேட்டூர் அணை விவாதம் நடந்த போது, அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தவறுதலாக வெறும் கன அடி என்று கூறினார். இது பற்றி நிருபர்களிடம் பேசிய போது நான் விளக்கினேன். இதனால் என் மீது அவதூறு வழக்கு பாய்ந்தது.
இப்படி ஏழு வழக்குகள் போடப்பட்டுள்ளன. இதை சந்தித்த நான் தயாராக உள்ளன. இது மானம் போன அரசு. முதல்வர் துறை குறித்து CBI விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அமைச்சர் மற்றும் டி.ஜி.பி., குறித்தும் CBI விசாரித்து வருகிறது. மேலும், தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு அக்டோபர் 31 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது....