நாமக்கல், மோகனுார் சாலையில் அரசு மருவக்கல்லுாரி மருத்துவமனை செயல்படுகிறது. அங்கு டாக்டர்கள், பணியாளர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் பணியாறுகின்றனர். காலையில் இருந்து இரவு வரை நாமக்கல் மட்டும்மால்லாமல, கரூர், திருச்சி மாவட்டங்களில் இருந்தும் தினமும் 1000-க்கும் மேற்பட்ட உள்ள மற்றும் வெளிநோயாளிகள் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
ALSO READ | வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த முதியவர் கைது!
கடந்த சில ஆண்டுக்கும் முன் தமிழகத்திலேயே சிறந்த மருத்துவமனை என நாமக்கல் மருத்துவமனை தரச்சான்றும் பெற்றுள்ளது. இந்நிலையில், பிரேத பரிசோதனை கூடத்தில் டாக்டராக பணியாற்றும் சிவானந்தம் என்பவர் நேற்று மதியம் அளவுக்கதிகமாக மது குடித்துவிட்டு போதை தலைக்கேறி மட்டையானார். அவரை ஊழியர்கள் சிலர் கைதாங்களாக தூக்கிவந்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள எக்ரோ அறைக்கு அருகே உள்ள மக்கள் சேவை மையம் அறையில் படுக்க வைக்கப்பட்டு சென்றனர்.
ALSO READ | வேலைக்கு செல்ல சொன்ன மனைவியை குத்தி கொலை செய்த கணவன்
நீண்டநேரம் போதையில் இருந்த அவர் மாலையில் எழுந்து சென்றதாக கூறப்படுகிறது. அரசு தலைமை மருத்துவமனையில் டாக்டர் ஒருவர் குடிபோதையில் மயங்கிக்கிடந்தது, மற்ற டாக்டர்களையும், ஊழியர்களையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR