தமிழகத்தில் திமுக அரசு அறிவிக்கும், பொதுமக்கள் நலன் சார்ந்த அனைத்து திட்டங்களும் முழுமையாக நிறைவேற்றப்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராசிபுரம் அருகே ஓய்வு பெற்ற அரசு அதிகாரியிடம் ATM கார்டை பெற்று 30 ஆயிரம் ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட இளைஞரை சிசிடிவி காட்சிகளின் உதவியோடு போலீஸார் தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அரசு பேருந்தின் டயர் வெடித்து எதிரே வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுனர், நடத்துனர் உள்ளிட்ட 8 பேர் காயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் ஒரே இரவில் 3 ஏ.டி.எம்.களில் கொள்ளை அடித்துவிட்டு கன்டெய்னர் லாரியில் தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையர்களை நாமக்கல் மாவட்ட போலீஸார் துப்பாக்கி முனையில் சுட்டுப் பிடித்தனர். அதில், கொள்ளையன் ஒருவர் உயிரிழந்த நிலையில், சேலம் சரக டிஐஜி உமா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
TN Latest News Updates: நாமக்கல் அருகே போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் ராஜஸ்தானின் கொள்ளை கும்பலை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இவர்கள் கேரளாவில் பல ஏடிஎம் திருட்டுகளில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 800 அடி உயரத்தில் இருந்து பாறை திடீரென உருண்டு அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் அருகே மினி ஆட்டோ ஒன்று நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்த விபத்தில், இடிபாடுகளுக்குள் சிக்கிய வாகன ஓட்டுநரையும், உதவியாளரையும் ஒரு மணி நேரம் போராடித் தீயணைப்புத் துறையினர் காப்பாற்றினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.