சிங்கள படையின் அத்துமீறலை இந்தியா சகிக்கக்கூடாது - ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக மீனவர்களிடம் சிங்கள படையினர் செய்யும் அத்துமீறலை இந்தியா இனியும் சகித்துக்கொள்ளக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 21, 2022, 07:35 PM IST
  • மீனவர்கள் விவகாரத்தில் தொடர்ந்து அத்துமீறும் இலங்கை
  • சமீபத்தில் கடலுக்குள் சென்ற மீனவர்கள் கைது
  • இதனை உடனடியாக தடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்
சிங்கள படையின் அத்துமீறலை இந்தியா சகிக்கக்கூடாது - ராமதாஸ் வலியுறுத்தல் title=

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், படகுகளை சேதப்படுத்துவதும் பல வருடங்களாக நடந்துகொண்டிருக்கிறது. மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி ஆட்சிகள் மாறினாலும் தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு ஆளாகும் காட்சிகள் மட்டும் இன்னமும் மாறவில்லை. சமீபத்தில்கூட, நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் வங்கக்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்களில் ஒரு படகில் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்த 12 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், காரைக்கால் மீனவர்கள் எல்லை தாண்டி வந்து நெடுந்தீவு அருகில் மீன் பிடித்ததாகக் கூறி பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தச் சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற செயல்கள் நடக்காமல் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.

மேலும் படிக்க | வருக வருக தமிழ்நாட்டுக்கு வருக - செஸ் ஒலிம்பியாட் பாடல் வெளியீடு

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “வங்கக்கடலில் கோடியக்கரைக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; அவர்களின் விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.

 

சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது  செய்யப்படுவது கடந்த 3 வாரங்களில் இது நான்காவது முறையாகும். இவர்களையும் சேர்த்து மொத்தம் 29 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்களப் படையினரின் இந்த தொடர் அத்துமீறலை இந்தியா இனியும் சகித்துக் கொண்டிருக்கக் கூடாது!

 

கைது செய்யப்பட்ட மீனவர்களில் இதுவரை விடுதலை செய்யப்பட்ட 12 பேர் தவிர மீதமுள்ள மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News