பண மோசடி வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்...

INX மீடியா பண மோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் மீது அமலாக்க இயக்குநரகம் (ED) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Last Updated : Jun 3, 2020, 10:11 AM IST
பண மோசடி வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்... title=

INX மீடியா பண மோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் மீது அமலாக்க இயக்குநரகம் (ED) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

சிதம்பரம், அவரது மகன் கார்த்தி மற்றும் பலர் மீது கடவுச்சொல் பாதுகாக்கப்பட்ட மின்னனு-குற்றப்பத்திரிகை(e-chargesheet) சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹார் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

READ | ப.சிதம்பரத்தை மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி: நீதிமன்றம்...

எனினும், நீதிமன்றம் சாதாரணமாக செயல்படத் தொடங்கியதும் குற்றப்பத்திரிகையின் அசல் நகலை தாக்கல் செய்ய நீதிபதி ஏஜென்சிக்கு உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் தவிர, குற்றப்பத்திரிகையில் கார்த்தியின் பட்டய கணக்காளர் SS பாஸ்கரராமன் மற்றும் பலர் பெயரிடப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி INX மீடியா ஊழல் வழக்கில் சிதம்பரம் மத்திய புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி, பணமதிப்பிழப்பு வழக்கில் ED அவரை கைது செய்தது.

ஆறு நாட்களுக்குப் பிறகு, அக்டோபர் 22-ஆம் தேதி, CBI தாக்கல் செய்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ED வழக்கில், அவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி ஜாமீன் கிடைத்தது.

READ | INX மீடியா வழக்கு: ப.சிதம்பரம் மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்!

சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த காலத்தில் 2007-ஆம் ஆண்டில் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற்றதற்காக INX மீடியா குழுமத்திற்கு வழங்கப்பட்ட வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் (FIPB) அனுமதியில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி CBI தனது வழக்கை மே 15, 2017 அன்று பதிவு செய்தது. இதனையடுத்து, பணமோசடி வழக்கை அமலாக்க துறை(ED) பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Trending News