அதிமுக சார்பில் சென்னையில் நடைபெற்றக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்துள்ளார். அதிமுகவுக்கு துரோகம் இழைத்த ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், சசிகலா உள்ளிட்ட யாரையும், மீண்டும் அடிப்படை உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள், அதிமுக மெகா கூட்டணி அமைத்து 2026 ஆம் ஆண்டு தேர்தலை சந்திக்கும் என தெரிவித்துள்ளார். அதிமுக இணைப்பு என திரும்ப பேச வேண்டாம், அதிமுக ஒன்றிணைந்துவிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | பழனி பஞ்சாமிர்தம் தூய்மையாக உள்ளதா...? சேகர் பாபுவுக்கு தமிழிசை கேள்வி!
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிட்டதாக தெரிவித்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்று எந்த முதலீட்டையும் ஈர்க்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். மாறாக அமெரிக்காவில் சென்று சைக்கிள் ஓட்டிவிட்டு வந்திருக்கிறார் எனவும் அவர் விமர்சித்துள்ளார். சென்னையில் கார் ரேஸ் நடத்துவது அவசியமா? என கேள்வி எழுப்பிய எடப்பாடி, " விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கார் பந்தயம் நடத்தி என்ன சாதித்துவிட்டார். கார் ரேஸ் நடத்தியதால் மக்களின் வரிப்பணம் தான் வீணாணது. இதனால் தமிழ்நாட்டுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. கார்ரேஸ் நடத்தி மக்களின் வரிப்பணத்தை வீணடித்துள்ளது திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்" என குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, " திமுக கூட்டணிக்குள் ஏற்கனவே குழப்பம் வந்துவிட்டது. திமுக அரசு கூட்டணியால் தான் இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது. கூட்டணி மட்டும் இல்லையென்றால் திமுக அவ்வளவு தான். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக சிறப்பாக தயாராகிக் கொண்டிருக்கிறது. வலுவான கூட்டணி அமைத்து அதிமுக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும். தமிழ்நாட்டில் யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்கான தேர்தல் அது. நிச்சயம் மக்கள் விரோத ஆட்சி செய்யும் திமுகவுக்கு தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் வாக்களிக்க மாட்டார்கள். அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்" என காரசாரமாக பேசினார்.
அதிமுகவில் இருக்கும் முக்கிய தலைவர்கள் அதிமுக இணைப்புக்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்த நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை ஒருபோதும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள் என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது அக்கட்சிக்குள் மீண்டும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
மேலும் படிக்க | eKYC Deadline | ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்! உஷார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ