ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 10ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய 10ம் தேதி முதல் 17 தேதி வரை இருந்த நிலையில் சனி, ஞாயிறு மற்றும் பொங்கல் அரசு விடுமுறை தவிர்த்து வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்ய 10,13,17ஆகிய தேதியில் மட்டுமே வேட்புமனுத்தாக்கல் செய்யும் சூழல் இருந்தது. இந்நிலையில் வேட்புமனுத் தாக்கல் கடைசி நாளான நேற்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் அவருக்கு மாற்று வேட்பாளராக மேனகா நவனீதனும், திமுக சார்பில் விசி சந்திரகுமாரும் அவருக்கு மாற்று வேட்பாளர் அவரது மனைவி அமுதாவும் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
மேலும் படிக்க | அடுத்த தேர்தல்! ஜெயலலிதா பாணியில் பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு
இதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்டவர்கள் சுயேட்சை வேட்பாளர்களாக வேட்புமனுத்தாக்கல் செய்தனர். மாலை 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு காத்திருந்து வேட்புமனுத்தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து வேட்புமனுத்தாக்கல் நிறைவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ், வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்தது. இன்று மட்டும் 55 வேட்புமனுத் தாக்கல் செய்தனர், இதன் மூலம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 58 வேட்பாளர்கள் 65 வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதில் அங்கரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சேர்ந்த 4 பேர் உட்பட 40
சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.
உரிய ஆவணங்கள் இன்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்து சென்றது தொடர்பாக இதுவரை 12 லட்சத்து 72 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் உரிய ஆவணங்கள் காண்பிக்கப்பட்டதால் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. மீதம் பறிமுதல் செய்யப்பட்ட 9 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் கருவூலத்தில் உள்ளது. தொடர்ந்து பேசிய மனிஷ் வேட்பு மனு பரிசீலினை நாளை காலை 11 மணிக்கு நடைபெறும், தொடர்ந்து 20 ம் தேதி 3 மணி வரை வேட்புமனு வாபஸ் பெறலாம். அதன்பிறகு சின்னம் ஓதுக்கீடு செய்து வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படும். இதுவரை தேர்தல் விதிமுறை மீறியதாக 5 வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் சியுஜி செயலி மூலம் 3 புகார் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் சின்னம் ஒதுக்கீடு என்பது அங்கரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு முன்னுரிமையும், சுயேட்சை வேட்பாளர்கள் ஒரே சின்னத்தை இருவர் அதற்கு மேற்பட்டவர்கள் கேட்கும் போது குலுக்கல் முறையில் வழங்கப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ