Erode Tamil Nadu Lok Sabha Election Result 2024: 2024 மக்களவைத் தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி 7ஆம் கட்ட வாக்குப்பதிவுடன் நிறைவடைந்தது. முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி 102 தொகுதிகளில் நடந்தது. வாக்குப்பதிவு எண்ணிக்கை 66.14 சதவீதமாக இருந்தது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26 ஆம் தேதி 89 தொகுதிகளில் நடைபெற்றது. இதில் 66.71 சதவீத வாக்குகள் பதிவாகின. மே 7ஆம் தேதி 94 நாடாளுமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற மூன்றாம் கட்டத் தேர்தலில் 65.68 சதவீத வாக்குகள் பதிவாகின.
சமீபத்திய புதுப்பிப்பு:
தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய தரவுகளின் படி, ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் திமுக அதிமுகவை விட 74045 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளது. திமுக வேட்பாளர் பிரகாஷ் 182454 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் அஷோக் குமார் 108409 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும் நாம் தமிழர் கட்சி கார்மேகம் 28944 வாக்குகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
மே 13 ஆம் தேதி நடைபெற்ற நான்காம் கட்டத் தேர்தலில் 96 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு 69.16 சதவீத வாக்குகள் பதிவாகின. 6 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் 49 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நடந்த ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு மே 20ஆம் தேதி நடைபெற்றது, இதில், 62.2 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆறாவது கட்ட வாக்குப்பதிவு மே 25ஆம் தேதி 58 மக்களவைத் தொகுதிகளில் நிறைவடைந்தது. இதன் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு 63.36 சதவீதமாக இருந்தது. ஏழாம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி நடந்தது. 57 தொகுதிகளில் நடந்த வாக்குப்பதிவில் 59.5% வாக்குகள் பதிவாகின.
தமிழ் நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளில் முதல் கட்டத்தில் வாக்குப்பதிவு நடந்தது. பல்வேறு அம்சங்களில் முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ள தமிழ் நாட்டின் ஈரோடு தொகுதி பற்றிய முழுமையான விவரங்களை இங்கே காணலாம்.
ஈடோட்டில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் - குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி), காங்கேயம், ஈரோடு (கிழக்கு), ஈரோடு (மேற்கு)
ஈரோடு தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 15,38,778, இதில் ஆண் வாக்காளர்கள்-7,44,927, பெண் வாக்காளர்கள்- 7,93,667, மூன்றாம் பாலின வாக்காளர்கள்- 184
மேலும் படிக்க | EVM வாக்கு எண்ணிக்கை... அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்..!!
2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்:
இந்தியா கூட்டணியில் தி.மு.கவில்- கே.இ.பிரகாஷ்
அ.தி.மு.க- ஆற்றல் அசோக் குமார்
என்.டி. ஏ பா.ஜ.க கூட்டணியில் த.மா.கா சார்பில் பி.விஜயகுமார்
நாம் தமிழர் கட்சி - மு. கார்மேகன்
கள நிலவரம் கூறுவது என்ன?
இம்முறை ஈரோட்டில் திமுக-வுக்கும் அதிமுக-வுக்கும் சரிசமமான வாய்ப்பு உள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
ஈரோடு: 2019 மக்களவைத் தேர்தல்:
வெற்றி பெற்றவர் - சுப்பராயன் சிபிஐ
பெற்ற வாக்குகள் - 508725
இரண்டாம் இடம் - எம்.எஸ்.எம்.ஆனந்தன் அதிமுக
பெற்ற வாக்குகள் - 415357
மூன்றாம் இடம் - சந்திரகுமார் மநீம
பெற்ற வாக்குகள் - 64657
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ