Tamilandu Flower Rates Latest Update : ஆயுதபூஜை, விஜயதசமி பூஜை கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், பூக்களின் விலை எல்லாம் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. கடந்த மாதம் வெறும் 20 ரூபாய்க்கு விற்பனையான பூ இப்போது ஒரு கிலோ 700 ரூபாய்க்கு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இந்த விலை உயர்வு வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் மக்களுக்கு கொஞ்சம் சிரமமாகவே இருக்கிறது. மல்லிகை, அரளி, முல்லை, பிச்சி, செண்டு, கோழிக்கொண்டை, கதம்பம், சம்பங்கி, மரிக்கொழுந்து, ரோஜா, வாடமல்லி ஆகிய ரகங்கள் அதிகளவில் விரும்பப்பட்டு மக்கள் அதிகம் வாங்குகின்றனர். மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மட்டுமல்லாமல் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளிலும் பூக்களின் விலை உயர்ந்தே இருக்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இரண்டாவது பெரிய பூ மார்க்கெட் என்றால் நிலக்கோட்டை தான். அங்கேயே பூ விலை கண்ணை கட்டுகிறது. கடந்த மாதம் ஒரு கிலோ மல்லிகைப் பூ விலை 250 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், ஆயுதபூஜை விஜயதசமி பூஜை கொண்டாட்டங்களால் ஒரு கிலோ மல்லிகைப் பூ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இதேபோல், கடந்த மாதம் கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையான அரளி பூ, தற்போது கிலோ ரூ.700க்கு விற்பனையாகிறது. மல்லிகை, அரளி, முல்லை, பிச்சி, செண்டு, கோழிக்கொண்டை, கதம்பம், சம்பங்கி, மரிக்கொழுந்து, ரோஜா, வாடமல்லி ஆகிய ரகங்கள் விலையும் அதிகரித்துள்ளது. ஏனென்றால் இந்த பூக்களை எல்லாம் மக்கள் அதிகம் விரும்பி வாங்குவதால் நல்ல விலையும் வியாபாரிகளுக்கு கிடைக்கிறது.
சம்பங்கி ரூ.60ல் இருந்து ரூ.250 ஆக உயர்ந்திருக்கும் நிலையில், செண்டு பூவும் ஒரு கிலோவிற்கு 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மரிக்கொழுந்து ரூ.30ல் இருந்து ரூ.100 ஆகவும் உயர்ந்துள்ளது. நிலக்கோட்டை சந்தைக்கு தினசரி சராசரியாக 30 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள 23 கிராமங்களில் இருந்து சுமார் 20 டன் மலர் வகைகள் வந்து செல்கின்றன. இங்கிருந்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அங்கிருந்து வெளிநாடுகளுக்கும் பூக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
மதுரையில் மல்லிகை, அரளி உள்ளிட்ட பூக்களின் விலை மார்க்கெட்டில் சீராகவே இருக்கிறது. இருப்பினும் ஆயுதபூஜைக்கு மக்கள் அதிகளவில் வந்து பூக்களை வாங்குவதால் மற்ற நாட்களைக் காட்டிலும் இன்று விலை கிலோவுக்கு 100 ரூபாய் முதல் 400 ரூபாய் அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க | சரஸ்வதி பூஜை 2024: கலைமகளின் கனிவான அருள் பெற சரஸ்வதி பூஜை செய்யும் முறை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ