சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
முரண்பாடுகளின் மொத்த சின்னம் திமுக பேரவை விதிகள் குழுவை கூட்டி ஆளுநர் பற்றி பேச கூடாது என கூறியது திமுக தான். 1999-ம் ஆண்டில் திமுக-தான் விதிகளை மாற்றியது என குற்றம்சாட்டினார். கொள்கைகளை அவ்வப்போது மாற்றிக்கொள்பவர்கள் திமுகவினர். கதவுகளை மூடிய திமுகவினரே திறக்க கூறுகின்றனர். ஆளுநருக்கு உள்ள அதிகாரத்துக்கு உட்பட்டு ஆய்வு செய்து வருகிறார்.
ஆட்சியை பிடிப்போம் என்று கமல்ஹாசன் கூறியது பற்றிய கேள்விக்கு, உலகக்கோப்பை கால்பந்தில் ரொனால்டோ-மெஸ்ஸி இடையேதான் போட்டி. தேர்தல் என்றால் அதிமுக - திமுக இடையேதான் போட்டி. வேறு யாரும் ஆட்சியை பிடிக்க முடியாது என கூறினார்.