ஜெய்பீம் திரைப்படத்தை பாராட்டிய கேரள முன்னாள் அமைச்சர்!

சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 13, 2021, 01:37 PM IST
ஜெய்பீம் திரைப்படத்தை பாராட்டிய கேரள முன்னாள் அமைச்சர்!  title=

'ஜெய் பீம்' மாற்றத்திற்கான ஆரம்பப்புள்ளி. சமூகத்தில் வேரூன்றி இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை உண்மைக்கு மிக நெருக்கமாகச் சித்தரித்திருக்கிறார்கள் என்று படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகளை கூறி பாராட்டியுள்ளார் கேரள மாநில முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா டீச்சர்.  தமிழகம் முழுவதும் தமிழகம் தாண்டியும் ஜெய்பீம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சாமானிய மக்கள் தொடங்கி திரைப் பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பல தரப்பிலிருந்தும் இப்படத்திற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்படத்திற்கு பாராட்டுக்களைத் தெரிவித்து மென்மேலும் படத்திற்கும், படக்குழுவிற்கு பெருமை சேர்த்திருக்கிறார். 

ALSO READ ஜெய்பீம் திரைப்படத்தை அரசியலுக்குள் சுருக்க வேண்டாம்: நடிகர் சூர்யா கடிதம்

படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் ஆதிக்கம் செலுத்துபவர்களை சாட்டையால் அடிக்கும் அளவிற்கு உள்ளது. மக்களுக்கு தொண்டு செய்யும் காவல்துறையும், வக்கீல் துறையும் எப்படியெல்லாம் இருக்க வேண்டும்? எப்படியெல்லாம் இருக்கக்கூடாது? என்பதை 'ஜெய் பீம்' படம் தெள்ளத்தெளிவாக காட்சிப்படுத்தியுள்ளது. பழங்குடியின இருளர் சமூகம் தினம்தினம் சந்திக்கும் இன்னல்களை நம் கண்முன்னே நிறுத்தி கண்களை குளமாக்கியுள்ளது.  அப்படிப்பட்ட இந்த படத்தை பல தரப்பினரும் பாராட்டி வரும் நிலையில் கேரள மாநிலத்தின் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜாவும் 'ஜெய் பீம்' படத்தை பாராட்டியுள்ளார். நாட்டையே அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்றை தடுக்கும் பொருட்டு முன்னோடியாக இருந்து பல துரிதமான நடவடிக்கைகளை எடுத்து உலக அளவில் பாராட்டை பெற்றவர் தான் இந்த ஷைலஜா. இந்த படத்தை பார்த்த இவர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பெரியளவில் பதிவினை பதிவிட்டு தனது பாராட்டுக்களை தெரிவித்து படத்திற்கும்,படக்குழுவிற்கும் மேலும் பெருமையினை சேர்த்துள்ளார். 

 

அந்த முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது,"நமது நாட்டில் இன்றளவிலும் காணப்படும் ஜாதி ரீதியான வன்கொடுமைகளையும் அரசியல் சட்ட திட்டங்களில் ஆதிக்கவாதிகள் செய்யும் துஷ்பிரயோகத்தையும் கன்னத்தில் அறைந்தது போல பளிச்சென்று படம் போட்டுக் காட்டியுள்ளது. நாட்டிலுள்ள ஆதிக்கவாதிகள் பலர் அடித்தட்டு மக்களையும் அடக்கி ஒடுக்கி தங்களுக்கு கீழேயே வைத்து கொள்ள நினைக்கின்றனர்.  அந்தப்படத்தின் காட்சிப்படுத்தப்பட்டுள்ள காவலர்களின் செயல்களை பார்த்த போது இதயம் கனத்தது அவர்களுக்கு கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லை. தங்கள் மீது தவறு இல்லை என்பதை நிரூபிக்க என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பது இந்த படத்தின் மூலம் நன்கு தெரிகிறது. மேலும் அங்கு சிறையில் நடக்கும் மரணங்கள் விதிமீறல்கள் போன்றவை அவசரநிலை காலத்தில் அதிகமாக நடந்தேறியது அடித்தட்டு மக்கள் பலர் இன்றளவிலும் போராடிக்கொண்டு தான் இருக்கின்றனர். அம்பேத்கரின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் சமத்துவம் என்ற ஒரு கருத்து அழுத்தமாக போதிக்கப்பட்டாலும் விளிம்பு நிலை மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் இன்றளவும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. 

jai

மேலும் இப்படத்தின் இயக்குனர் ஞானவேல் ஏழைகளுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்து பலகட்ட போராட்டங்களை நிகழ்ச்சி நீதி பெற்றுத் தந்த வழக்கறிஞர் சந்துருவின் வாழ்க்கையில் மிக அழகாக காண்பித்துள்ளார். இதில் சூர்யாவின் கதாபாத்திரம் உண்மையான வழக்கறிஞர் சந்துருவின் நீதி போராட்டத்தை கண் முன்னே நிறுத்துகிறது. முக்கியமாக இந்தப்படத்தில் என்னை கவர்ந்தவர் செங்கேணியாக வாழ்ந்த லிஜோமோல் தான். இந்தப் பெண்ணின் போராட்டம்தான் படத்திற்கு உயர்வை தருகிறது. இவருக்கு எத்தனை விருதுகள் கொடுத்தாலும் போதாது அந்த அளவிற்கு இவர் இதில் செங்கனி ஆகவே வாழ்ந்திருக்கிறார். 

அதுமட்டுமல்லாது அதில் ராஜாக்கண்ணுவாக நடித்த மணிகண்டன் என் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்துள்ளார். அவரின் கதாபாத்திரம் இன்னும் என் மனதை விட்டு நீங்கவில்லை. நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவதோடு காவல்துறை அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார். அதோடு நெகட்டிவ் ரோலில் நடித்த அந்த மூன்று காவல்துறை அதிகாரிகளும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் அழுத்தமாக நின்று தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  பலரது மனதிலும் நல்ல ஒரு தாக்கத்தையும், சமூகத்தில் நிலவும் அநியாயங்களை ஆணித்தரமாக மக்களிடையே வெளிச்சம் போட்டு காட்டி நல்லதொரு படத்தை, நல்ல முறையில் உருவாக்கிய சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று ஷைலஜா கூறியுள்ளார்.

ALSO READ ஆங்கில படத்தில் இருந்து காப்பி அடிக்கபட்டதா "ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்"?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News