டெல்லி, உத்திரபிரதேசம், பீகார், அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் கொரோனாத் தொற்று பரவத் தொடங்கியுள்ளது. தற்போது மெல்ல தென் மாநிலங்களுக்கும் கொரோனா பரவி வருகிறது. சமீபத்தில் சென்னை ஐ.ஐ.டி.யில் 60 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் வட மாநிலத் தொழிலாளர்கள் சிலருக்கும் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதால் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளது.
மேலும் படிக்க | மருத்துவமனைகளை தயார் நிலையில் வையுங்கள் - மருத்துவ கல்வி இயக்குனர் உத்தரவு
இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் முக கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களிடம் ரூ.500 அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி வரும் 27ம் காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்நிலையில், சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, மருத்துவத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ வல்லுநர் குழுவினர், காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகயோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க | மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்...மாற்றி மாற்றி பேசும் அரசு
கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றிய முக்கிய அம்சங்கள் ;-
* பொது இடங்களிலும், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் அனைவரும் முக கவசம் அணிவதை நீங்கள் அனைவரும் உறுதி செய்திட வேண்டும்.
* கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பூசி ஒன்றே சிறந்த ஆயுதம். தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
* தடுப்பூசி செலுத்துவதை மக்கள் இயக்கமாக மாற்றிக்காட்டிக்காட்டிய ஆட்சியர்களின் பணி மகத்தானது
* எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்
மேலும் படிக்க | தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தடுப்பூசி முகாம் - அமைச்சர் சுப்பிரமணியன்
* 2ம் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களையும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களையும் இனி வரும் வாரங்களில் தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்வதே நம் முன்பு இருக்கக்கூடிய மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.
* பொருளாதார வளர்ச்சி தடைபட்டு விடாமலும், மக்களின் வாழ்வாதாரம் மீண்டும் பாதிக்கப்பட்டு விடாமலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
* அதே நேரத்தில் எதிர்காலத்தில் இந்த பெருந்தொற்றினால் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுத்திடவும் வேண்டும்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR