Chennai Traffic Changes: சென்னை ரன்னர்ஸ் சார்பில் 'FRESH WORKS CHENNAI MARATHON' என்ற தொடர் ஓட்டப்பந்தயம் நடைபெறுகிறது. இந்த பந்தயம் 42.195 கி.மீ., 32.186 கி.மீ., 21.097 கி.மீ., மற்றும் 10 கி.மீ., என நான்கு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. இதனை சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், சென்னை பெருநகர காவல்துறை நேற்று (ஜன. 4) வெளியிட்ட அறிக்கையில்," 'FRESH WORKS CHENNAI MARATHON' என்ற பெயரில் நடைபெறும் தொடர் ஓட்டப் பந்தயத்தை முன்னிட்டு வரும் சனிக்கிழமை (நாளை, ஜன. 6) காலை 4.00 மணி முதல் நேப்பியர் பாலம் மற்றும் பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப் பள்ளியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தை மாரத்தான் ஓட்டம் காமராஜர் சாலை, சாந்தோம் ஹை ரோடு, டாக்டர்.டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சர்தார் படேல் சாலை, ஓ.எம்.ஆர்., கே.கே.சாலை, இ.சி.ஆர். வழியாக சென்றடையும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்நிகழ்ச்சி தொடர்பாக போக்குவரத்து மாற்றம் பின்வருமாறு செய்யப்பட உள்ளதாகவும் சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது, அவற்றை இதில் காண்போம்.
மேலும் படிக்க | பெண் சிசுவை சாலையோரம் வீசிச் சென்ற தாய்
போக்குவரத்து மாற்றங்கள்:
- அடையார் மார்க்கத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் திரு.வி.க. பாலம், டாக்டர். டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சாந்தோம் ஹை ரோடு, காமராஜர் சாலை மற்றும் உழைப்பாளர் சிலை வரை வழக்கம் போல் எந்தவித மாற்றமும் இல்லாமல் செல்லலாம்.
- போர் நினைவிடத்தில் இருந்து திரு.வி.க. பாலம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும் வாகனங்கள் கொடி மரச் சாலை சாலைக்கு வழியாக திருப்பிவிடப்பட்டு வாலாஜா பாயின்ட் அண்ணா சாலை வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.
- ஆர்.கே.சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் வி.எம்.தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும். அவ்வாகனங்கள் ராயப்பேட்டை ஹை ரோடு, லஸ் கார்னர், ஆர்.கே.மட் சாலை வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.
"FRESH WORKS #CHENNAI #MARATHON" on Saturday Jan 06, 2024, in 4 categories
42.195 Km,
32.186 Km,
21.097 Km and
10 Km Run@ 04.00 hrs
from #Napierbridge #GCTP made #Traffic arrangements from 03.00 am to 10.00 am:@SandeepRRathore @R_Sudhakar_Ips@chennaipolice_ pic.twitter.com/5PsR0euYi6
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) January 4, 2024
- மத்திய கைலாஷில் இருந்து வரும் வாகனங்கள் பெசன்ட் அவென்யூ சாலையை நோக்கி அனுமதிக்கப்பட மாட்டது. அவ்வாகனங்கள் LB சாலை, சாஸ்திரி நகர் வழியாக திருவான்மியூர் சிக்னல் வழியாகத் தங்களது இலக்கை சென்றடையலாம்.
- காந்தி மண்டபத்தில் இருந்து வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வாகனங்கள் LB சாலை, சாஸ்திரி நகர், திருவான்மியூர் சிக்னல் வழியாகத் தங்களது இலக்கை
சென்றடையலாம்.
- பெசன்ட் நகர் 7ஆவது அவென்யூவில் இருந்து வரும் வாகனங்கள் எலியாட்ஸ் பீச் நோக்கி அனுமதிக்கப்படாமல், எம்ஜி சாலையை நோக்கி திருப்பி விடப்படும்.
- மாநகர பேருந்துகள் மட்டும் பெசன்ட் நகர் டெப்போவிற்கு அனுமதிக்கப்படும். பெசன்ட் அவென்யூ, ML பார்க் நோக்கி அனுமதிக்கப்பட மாட்டாது.
இதன்மூலம், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறைக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு இந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் நாளை அதிகாலை 3 மணியில் இருந்து காலை 10 மணிவரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 200 போதை மாத்திரை 8 ஊசிகள்.. கல்லூரி மாணவர்களுக்கு குறி! இளைஞர் கைது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ