இன்று சித்திரை தமிழ் புத்தாண்டு திருநாள்: எவ்வாறு வழிபடுவது?

தமிழர்கள் ஏப்ரல் 14-ம் தேதி தமிழில் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு தினமா கொண்டாடி வருகின்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 14, 2019, 10:05 AM IST
இன்று சித்திரை தமிழ் புத்தாண்டு திருநாள்: எவ்வாறு வழிபடுவது? title=

புது வருடப்பிறப்பு என்றாலே எல்லோர் மனதிற்குள் உற்சாகமும், சந்தோஷமும் பொங்கி எழும். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஏப்ரல் 14-ம் தேதி தமிழில் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு தினமா கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி தமிழகம் முழுவதும் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. 

தமிழர்களின் நாட்காட்டியில் முதல் மாதம் சித்திரை மாதம் இந்நாளை நாளை ’புது வருஷம்’ என்று கூறுவார். தமிழ்நாட்டின் சில பகுதிகளில் ’சித்திரை விஷு’ என்றும் இந்த நாளை அழைக்கின்றனர்.

உலகத் தமிழர்களால் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று தமிழகம் முழுவது அரசு விடுமுறை அளித்து வருகிறது. இந்த புத்தாண்டு தினம் இலங்கையிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதேசமயம் கேரள மக்கள் விஷு என்றும், அசாம் மக்கள் பிஹு என்றும், பஞ்சாப் மக்கள் வைஷாகி என்றும், மேற்கு வங்க மக்கள் பொஹெலா பொய்ஷாக் என்றும் பெயரிட்டு அழைக்கின்றனர். இவர்களோடு மணிப்பூர், திரிபுரா, ஒடிசா, பிஹார், உத்தரப்பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மக்களும் புத்தாண்டை பல்வேறு பெயர்களில் கொண்டாடி வருகின்றனர்.

புத்தாண்டு நாளில் நாம் அதிகாலையில் கண்விழித்தவுடன் முதலில் இறைவனின் திருவுருவப் படங்களைப் பார்த்தால் அந்த வருடத்தின் அனைத்து நாட்களிலும் நமக்கு நற்பலன்களைத் தரும் விதத்தில் அமையும். ஆகவே கல்வி, செல்வம், வீரம் மூன்றுக்கும் அதிதேவதைகள் வீற்றிருக்கும் உள்ளங்கையை தரிசித்தால் அன்று முழுவதும் நல்ல சம்பவங்கள் நடைபெறும்.

மேலும் வலம்புரிச்சங்கு வைத்திருப்பவர்கள் அதில் காசுகளைப் பரப்பி வைத்து அதன் முகத்தில் விழிக்க வேண்டும். கண்ணாடி, தண்ணீர், ஆலய கோபுரம் போன்றவற்றையும் எழுந்தவுடன் பார்ப்பது நல்லது.

Trending News