ஆப்பிள் சத்துக்களின் களஞ்சியமாகும். ஆப்பிள் சாப்பிட்டால் நோய்கள் வராமல் தடுக்கிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆப்பிளில் கலோரிகளின் அளவு மிகவும் குறைவு. ஒரு நடுத்தர அளவிலான ஆப்பிளில் 60 முதல் 70 கலோரிகள் உள்ளன. ஆப்பிளை முழுமையாக தோல் நீக்காமல் சாப்பிட்டால் அதிகபட்ச பலனை அடையலாம். ஆப்பிளை ஜூஸாக மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் அந்த அளவிற்கு ஆரோக்கியமானதாக கருதப்படுவதில்லை. ஏனெனில் சமைப்பதாலும் மற்றும் பதப்படுத்துவதாலும் ஆப்பிளில் இருந்து சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நீக்கி விடும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள் .
ஆப்பிள்களில் சிவப்பு ஆப்பிள் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது, ஏனெனில் அதன் அடர் சிவப்பு தோலில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இவை நமது செல்கள் சேதமடையாமல் பாதுகாக்கின்றன. இருப்பினும், அனைத்து வகையான ஆப்பிள்களிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது தான். அதனால், உங்களுக்கு பிடித்த எந்த வகை ஆப்பிளை வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ள ஆப்பிள் ஆற்றலை அள்ளிக் கொடுக்கக் கூடியது. இதை உட்கொள்வது வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. நமது செரிமான அமைப்பை வலுப்படுத்தவும் உதவுகிறது.
ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவும் ஆப்பிள்
உடலில் அதிக கொலஸ்ட்ரால் அளவு காரணமாக, இதய நோய்களின் அபாயம் அதிகரிக்கிறது. தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தி, இதயத்திற்கு இரத்த ஓட்டத்தைத் தடுப்பதால், மாரடைப்பு அபாயம் அதிகரிக்கிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. இது ஆப்பிளில் நிறைந்துள்ளது. ஆப்பிளில் உள்ள நார்ச்சத்தான பெக்டின் கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் கொண்டது. அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தினமும் ஆப்பிள் சாப்பிட்டால், அவர்களின் கொலஸ்ட்ரால் அளவு 5% முதல் 8% வரை குறைகிறது என ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் ஆப்பிள்
இனிப்பு அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளும் போது, இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கிறது. ஆனால் நார்ச்சத்து நிறைந்த ஆப்பிள் உங்கள் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும். ஆப்பிளை சாப்பிடாதவர்களுடன் ஒப்பிடும்போது, தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட ஆப்பிளை சாப்பிடுபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து 28% குறைவு என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும் ஆப்பிள்
ஆரோக்கியமான உணவு முறை மூலம் நமது இரத்த அழுத்த அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். சில ஆராய்ச்சியாளர்கள் காய்கறியின் தோலில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகின்றன என்று கூறுகிறார்கள். இது தவிர, நார்ச்சத்தும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
வீக்கத்தைக் குறைக்க உதவும் ஆப்பிள்
ஆப்பிளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பொருட்கள், குறிப்பாக நார்ச்சத்து மற்றும் குர்செடின் என்னும் ஆக்ஸிஜனேற்றி நமது சுவாச அமைப்பில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. ஆப்பிள் சாப்பிடுவது இரத்தத்தில் உள்ள சி-ரியாக்டிவ் புரதத்தின் அளவைக் குறைக்கிறது என்று கூறப்படுகிறது. சி-ரியாக்டிவ் புரதம் நாள் பட்ட அழற்றி பாதிப்புக்கான முக்கிய காரணம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்
உடல் பருமனை குறைக்க உதவும் ஆப்பிள்
ஆப்பிளில் அதிக நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்தும் உள்ளது. எனவே, இதனை உட்கொள்வதன் மூலம், வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும், மீஅடிக்கடி பசி எடுக்காது. அதோடு, ஆப்பிளில் கலோரிகளின் அளவு மிகக் குறைவு. எனவே இதை உட்கொள்வது உடல் பருமனை குறைக்கவும், ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் உதவுகிறது.
மேலும் படிக்க | மூளை - நரம்பு ஆரோக்கியத்தை காக்கும் கோலின் சத்து... நிறைந்த சில உணவுகள்
கடுமையான நோய்களில் இருந்து பாதுக்காக்கும் ஆப்பிள்
ஆப்பிளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற தீவிர நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். ஒதினமும் ஆப்பிள் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய்க்கான ஆபத்து 13% முதல் 22% வரை குறைவாக இருக்கும் என்கின்றன ஆய்வுகள்
ஆப்பிள் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்
1. ஆப்பிளை சாப்பிடுவதும் அதன் ஜூஸை சாறு குடிப்பதும் ஆரோக்கியமானது தான் என்றாலும், ஆப்பிள் விதைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நச்சுத்தன்மையுள்ள ஆப்பிள் விதைகளில் சயனைடு உள்ளது.
2. கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆப்பிள் சாப்பிடும் பழக்கம் உள்ளது. இது தவிர, பாலூட்டும் தாய்மார்களும் ஆப்பிள் சாப்பிடுகிறார்கள், ஆனால் அவர்கள் ஆப்பிள்களை அதிக அளவு சாப்பிடுவது எவ்வளவு பாதுகாப்பானது என்பது பற்றிய போதுமான மற்றும் நம்பகமான தகவல்கள் இல்லை. எனவே, ஆப்பிளை அளவோடு உட்கொள்ள வேண்டும்.
3. ஆப்பிளில் அதிக நார்சத்து உள்ளது. நார்ச்சத்து நமது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, ஆனால் அதிகப்படியான நார்ச்சத்து வீக்கம் மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். யது மற்றும் பாலினத்தைப் பொறுத்து, ஒரு நபருக்கு தினமும் 20 முதல் 40 கிராம் நார்ச்சத்து தேவைப்படுகிறது. இது அளவிற்கு அதிகமாகும் போது செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
ஒரு நாளைக்கு எத்தனை ஆப்பிள் சாப்பிடலாம்?
சராசரியாக, ஒரு நபர் ஒன்று அல்லது இரண்டு ஆப்பிள்களை சாப்பிட வேண்டும். அதற்கு மேல் சாப்பிட்டால் சில கடுமையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
ஆப்பிள் சாப்பிட்ட பிறகு தவிர்க்க வேண்டிய உணவுகள்
ஆப்பிள் சாப்பிட்ட பிறகு முள்ளங்கி, புளிப்பு பழங்கள், ஊறுகாய் போன்றவற்றை சாப்பிடுவதை எப்போதும் தவிர்க்க வேண்டும். இது தவிர தண்ணீர் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். முள்ளங்கி, தயிர், ஆப்பிள் ஆகியவை குளிர்ச்சி தரும் தன்மை கொண்டவை என்பதால், ஆப்பிளை சாப்பிட்ட பின் இந்த இரண்டு பொருட்களையும் உட்கொண்டால், சளி பிரச்சனை அதிகரித்து, செரிமான பிரச்சனைகளும் வரலாம். புளிப்பு பழங்களை சாப்பிடுவதால் வயிற்றில் அமிலம் உருவாகும். ஆப்பிள் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது உங்கள் வயிற்றின் pH அளவை பாதிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | LDL கொழுப்பை எரித்து... மாரடைப்பை தடுக்க... உதவும் சில எளிய பழக்கங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ