இளையராஜா சர்ச்சைப் பேச்சுகளும், சில ரிப்ளைகளும்.!

பிரதமர் மோடியை அண்ணல் அம்பேத்கருடன் ஒப்பிட்டுக் கருத்து தெரிவித்த இசைஞானி இளையராஜா   

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Apr 17, 2022, 12:13 PM IST
  • சர்ச்சைகளில் சிக்கும் இளையராஜா
  • இளையராஜாவைக் குறி வைக்கிறதா ஆர்.எஸ்.எஸ் ?
  • இளையராஜா என்ன குற்றம் செய்தார் ? - எல்.முருகன்
இளையராஜா சர்ச்சைப் பேச்சுகளும், சில ரிப்ளைகளும்.! title=

சமீப காலங்களில் அதிக சர்ச்சைகளில் இசையமைப்பாளர்கள் சிக்கி வருகின்றனர். தமிழணங்கு விவகாரத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் ட்வீட் விவாதத்திற்கு உள்ளாகி ஓய்ந்த நிலையில், தற்போது இளையராஜா ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். 
ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சீர்திருத்தவாதிகளின் கருத்துகளும், செயல்பாட்டாளர்களின் அமலாக்கமும் என்ற தலைப்பில் புத்தகத்தின் முன்னுரையாக இளையராஜா எழுதியதுதான் சர்ச்சையாக வெடித்துள்ளது. 

மேலும் படிக்க | அம்பேத்கர் பிறந்தநாள் இனி சமத்துவ நாள் - சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு

அதில், "பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இளையராஜாவின் இந்த முன்னுரைக் கருத்து பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் தூண்டியிருக்கிறது. மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடுவது முற்றிலும் தவறானது, முரணானது என்று சமூக வலைதளங்களில் இயக்குநர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | மோடி முகத்தில் கத்தி : விஜய் ரசிகர்கள் மீது போலீஸில் புகார்

மூடர்கூடம் திரைப்பட இயக்குநர் நவீன் பதிவிட்டுள்ளதாவது, ‘இளையராஜா தமிழர்களை தாலாட்டிய தாய். தவறிழைத்தவர் தாயாயினும் சுட்டிக்காட்டும் பிள்ளைகளே அறிவார்ந்த சமூகமாக இருக்க முடியும். அவர் கருத்தை வெறுக்கிறோம், அவரை அல்ல. ராஜாசார் இசை எங்கள் மூச்சு. அய்யா அம்பேத்கர் எங்கள் தன்மானம். சுவாசிப்பதற்காக தன்மானத்தை என்றும் இழக்கமாட்டோம் என தெரிவித்துள்ளார்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இளையராஜாவின் இந்தக் கருத்துப் பற்றிப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பேசியதாவது, ‘சமூகத்தில் யார் மக்களோடு நெருக்கமாக இருக்கிறார்களோ, அவர்களை சந்திப்பது தான் ஆர்.எஸ்.எஸின் நோக்கம். அவர்கள், அப்படித்தான் இளையராஜாவை சுற்றிவளைத்து இருக்கக்கூடும் என நினைக்கிறேன். ‘அம்பேத்கர் - மோடி சிந்தனையாளர்கள் செயல்பாட்டாளர்களும்’ என்ற புத்தகத்தை கொடுத்து அணிந்துரை கேட்டிருக்கிறார்கள். அவரும் இரண்டு பக்கம் எழுதிக் கொடுத்திருக்கிறார். அம்பேத்கர் இருந்திருந்தால் மோடியை பாராட்டி இருப்பார் என இசைஞானி சொல்லியிருக்கிறார். அவர் இருந்திருந்தால் இந்தியாவின் திசையே மாறியிருக்கும். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் 13 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இசைஞானி இளையராஜா போன்றவர்களை குறி வைப்பதே அவர்களின் முக்கிய நோக்கம். இளையராஜா பாவம் என்று இரக்கம் காட்ட விரும்புகிறேன்.’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | 'இளமை இதோ இதோ’ : ஸ்டைலாக புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார் இசைஞானி இளையராஜா

இளையராஜா குறித்துப் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ‘அது இளையராஜாவின் சொந்த கருத்து. அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். எந்த அரசியல் சர்ச்சையிலும் சிக்காதவர்.  அவருடைய தனிப்பட்ட கருத்தை அவர் எழுதியுள்ளார். இதை சர்ச்சைக்குள்ளாக்குவது சரியல்ல’ என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து இளையராஜா மீது வைக்கப்படும் விமர்சனங்களைக் குறிப்பிட்டுத் தற்போது மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ட்விட்டரில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

 

அதில், ‘இளையராஜா என்ன குற்றம் செய்தார்?. திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு பிடிக்காத ஒரு கருத்தை இளையராஜா சொன்னது ஒரு குற்றமா?!. கருத்து சுதந்திரம் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. ஆனால் அத்தகைய கருத்து சுதந்திரம் எதற்காக இளையராஜாவுக்கு மறுக்கப்படுகிறது. திமுக தலித் சமூகத்தினருக்கு எதிராகவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான மனநிலையில் உள்ளதையே அவர்களது எதிர்ப்பு காட்டுகிறது’ என்று விமர்சித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News