Senthil Balaji ED Investigation: சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை செய்தது.
அதில், செந்தில் பாலாஜி கைது சரியானது எனவும், அவரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதியளித்தும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து, ஐந்து நாட்கள் செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதியளித்து உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து, செந்தில் பாலாஜியை காவலில் எடுக்கக் கோரி அமலாக்கத் துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். உச்ச நீதிமன்ற உத்தரவின் இணையதள நகலை அப்போது அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். தொடர்ந்து, அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கும் நாட்களில், ஒரு நாளைக்கு இருமுறை காவேரி மருத்துவமனையில் பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும் படிக்க | சென்னையில் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை!
இருப்பினும், இதில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால், மேற்கொண்டு வேறு உத்தரவுகளை பிறப்பிக்க இயலாது எனவும் அமலாக்கத் துறையினர், செந்தில் பாலாஜி உடல் நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும் எனக் கூறி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறை வசம் ஒப்படைத்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து, செந்தில் பாலாஜியை புழல் சிறையில் இருந்து சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனுக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அவரை காரில் அழைத்து வந்தனர். தொடர்ந்து, நேற்றிரவில் இருந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த விசாரணை முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதில், அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கி தர பணம் வாங்கிய விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி டெல்லி அழைத்துச் சென்று விசாரணை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது வரை அதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறையின் வழக்கு சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் அவரை ஐந்து நாட்கள் விசாரணைக்கு பின் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தான் ஆஜர்படுத்த வேண்டும். எனவே செந்தில் பாலாஜியை டெல்லி அழைத்துச் செல்வதற்கான சூழ்நிலை தற்போது வரை இல்லை என்ற நிலைதான் உள்ளது. விசாரணையின் சூழலைப் பொறுத்து அவர் டெல்லி அறிவித்துச் செல்லப்படுவாரா அல்லது சென்னையிலேயே விசாரிக்கப்படுவாரா என்பது அமலாக்கத்துறை தான் முடிவு செய்யும்.
மேலும் படிக்க | நாடகமும் நடிப்பும் முடிவுக்கு வந்தது! EDயின் பிடிக்குள் வந்த செந்தில் பாலாஜி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ