Krishnagiri Tamil Nadu Election Result 2024: 2024ம் ஆண்டிற்கான மக்களவை தேர்தல், 2024 ஏப்ரல் 19 ஆம் தேதி துவங்கி, 2024 ஜூன் 1 ஆம் தேதி வரை, ஏழு கட்டங்களாக நடைபெற்றது. அதை தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. அதில் தமிழ்நாட்டில் இருக்கும் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி (Kallakurichi Lok Sabha constituency) பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளாலாம்.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், செங்கம் (தனி), திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், கலசப்பாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளது .
கிருஷ்ணகிரி மக்களை தொகுதி முன்னணி விபரம்
தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட கே. கோபிநாத் 73060 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
அவருக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க கட்சியின் சார்பில் போட்டியிட்ட டாக்டர். வி. ஜெயப்பிரகாஷ் 46471 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
பா.ஜ.க சார்பாக நரசிம்மன் 36842 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் வித்யா ராணி 15535 வாக்குகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளார்.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி வாக்களர் எண்ணிக்கை மற்றும் வாக்குபதிவு விபரம்
மொத்த வாக்காளர்கள் :16,23,179
ஆண் வாக்காளர்கள் : 8,14,076
பெண் வாக்காளர்கள் :8,08,798
மூன்றாம் பாலினத்தவர் : 305
பதிவான வாக்குகள் - 1160498
வாக்குப்பதிவு சதவீதம் - 71.50 ஆகும்.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள் விவரம்
2024 மக்களவைத் தேர்தலில், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் கே. கோபிநாத் கைச் சின்னத்திலும், அ.தி.மு.க கட்சியின் சார்பில் டாக்டர். வி. ஜெயப்பிரகாஷ் இரட்டை இலை சின்னத்திலும், பா.ஜ.க சார்பாக நரசிம்மன் தாமரை சின்னத்திலும், நாம் தமிழர் கட்சி சார்பில் வித்யா ராணி மைக் சின்னத்திலும் போட்டியிட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி வெற்றி வேட்பாளர்கள் விவரம்
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற 17வது மக்களவைத் தேர்தலில், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட செல்லக்குமார் 6,11,298 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் 2014ம் ஆண்டு நடைபெற்ற 16வது மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட அசோக்குமார் 4,80,491 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
மேலும் படிக்க | EVM வாக்கு எண்ணிக்கை... அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்..!!
மேலும் படிக்க | அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அபார வெற்றி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ