Lok Sabha Elections: இன்னும் சில நாட்களில் நாடு முழுதும் மக்களவைத் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு, தேர்தல் வாக்குறுதிகள், பிரச்சாரங்கள் என நாடே களைகட்டியுள்ளது. தமிழகத்திலும் அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. கட்சிகள் தங்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டன.
இந்த நிலையில், கரூர் நாடாளுமன்றத் தொகுதியில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் தீவிர பிரச்சாரம் மெற்கொள்ளப்பட்டு வருகின்றது. பிரச்சாரத்தில் பேசிய முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை திமுக கொண்டு வந்தது போல் பேசி வருகின்றனர் என குற்றம் சாட்டினார்.
கரூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் முன்னிட்டு அதிமுக சார்பில் போட்டியிடும் தங்கவேலுக்காக அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கா பரமத்தி கடைவீதி பகுதியில் அதிமுக -வினர் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் போக்குவரத்துறை அமைச்சரும் கரூர் மாவட்ட செயலாளருமான எம் ஆர் விஜயபாஸ்கர், “கடந்த அதிமுக ஆட்சியில் அரவக்குறிச்சி பொதுமக்களுக்கு குடிநீர் தேவைகளுக்காக 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்களை கொண்டு வந்தோம். அதேபோன்று புகலூர் பகுதியில் 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கதவனை திட்டத்தை கொண்டு வந்ததும் அதிமுக ஆட்சியில்தான். ஆனால் இந்த விடியா திமுக ஆட்சியில் இதை நாங்கள் கொண்டு வந்தோம் என கூறி வருகின்றனர்” என விமர்சித்தார்.
மேலும் படிக்க | தமிழகத்தின் வளர்ச்சியை கெடுக்கும் ஆதிக்க சக்தியோடு தான் எங்களது போட்டி: அண்ணாமலை
தொடர்ந்து, “மகளிர் உரிமைத் தொகை ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு கொடுத்துவிட்டு ஒண்ணேகால் கோடி பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வரவில்லை. விடியா திமுக ஆட்சி அமைந்த உடன் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகையை வழங்கப்படும் என கூறிய நிலையில் இதுவரை பாதி பேருக்கு இதை வழங்கவில்லை.” என அவர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம் சாட்டினார்.
“ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டு ஆகியும் இந்த திமுக அரசு இதுவரை மகளிர் உரிமைத் தொகை முழுமையாக வழங்கவில்லை.” என தெரிவித்த அவர், எம்பி ஜோதிமணி ஐந்து ஆண்டுகளில் பொது மக்களை கூட சந்திக்க வரவில்லை, என்றும் இப்படிப்பட்டவர்களுக்கு மக்கள் எதற்கு வாக்களிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் படிக்க | எடப்பாடியின் போட்டோவை காட்டி சவால் விட்ட அமைச்சர் உதயநிதி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ