சவுக்கு சங்கர் தனது சவுக்கு மீடியா யூ டியூப் பக்கத்தில் லைகா நிறுவனத்தை, போதை கடத்தல் கும்பலுடன் தொடர்புபடுத்தி பேசியுள்ளதாகக் கூறி, லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், தமிழக திரை உலகிலும், உலகளவிலும், நற்பெயரை கொண்டுள்ள லைகா நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் சவுக்கு சங்கரின் பேச்சு அமைந்துள்ளதால், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்க உத்தவிட வேண்டுமெனவும், இந்த வீடியோ மூலம் கிடைத்த தொகையை டெபாசிட் செய்ய உத்தரவிட வேண்டுமெனவும் மற்றும் யூ டியூப் பக்கத்தில் உள்ள வீடியோ நீக்க உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும் படிக்க | ’ஜாதிவெறி பேச்சு’ நாமக்கல் வேட்பாளரை மாற்ற கோரிக்கை! திமுக தலைமை கவனிக்குமா?
இந்த மனு நீதிபதி என்.சதிஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, லைகா நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி மற்றும் வழக்கறிஞர் அரவிந்த் ஸ்ரீவத்சவா ஆகியோர் ஆஜரானார்கள். யூ டியூப்-பில் அதிக பார்வையாளர்களை பெற வேண்டும் என்ற நோக்கத்திலியே இதுபோன்ற அவதூறு கருத்துகளை சவுக்கு சங்கர் வெளியிடுவதாக தங்கள் வாதத்தின்போது கூறினர். யூ டியூப் பக்கத்தில் உள்ள அந்த வீடியோவை ஆறு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளதாகவும் லைகா வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
இதனையடுத்து, லைகா நிறுவனம் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க சவுக்கு சங்கருக்கு இடைக்கால தடை விதித்தார் நீதிபதி. மேலும், இந்த வீடியோக்கள் மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என யூ டியூப் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். யூ டியூப்-ல் உள்ள வீடியோக்களை நீக்குவது தொடர்பாக சவுக்கு சங்கர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஏப்ரல் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ