சென்னை: பொங்கள் பண்டிகையினை முன்னிட்டு ஆண்டுதோறும் விமர்சையாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள், இந்த இந்த ஆண்டும் 3 இடங்களில் நடத்தப்படுகிறது. இதில் உலகப்புகழ் பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி 17 ஆம் தேதி தொடங்க உள்ளது. அதேபோல பாலமேடு மற்றும் அவனியாபுரத்திலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. அதுமட்டுமில்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.
அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் புகழ் பெற்றவை. இந்த மூன்று போட்டிகள் மீது மக்களுக்கு எப்பொழுதும் ஒரு தனி ஆர்வம் இருக்கிறது. இந்த வருடத்திற்கான போட்டிகள் எப்பொழுது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவர்களுக்கு, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மூன்று ஊர்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் அடுத்தடுத்த நாட்கள் நடக்க உள்ளது. அதாவது, அவனியாபுரத்தில் வரும் 15 ஆம் தேதியும், பாலமேட்டில் 16 ஆம் தேதியும், அலங்காநல்லூரில் 17 ஆம் தேதியும் நடைபெற உள்ளன என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பது குறித்து பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதில் ஒன்று 21 வயதிற்கு குறைவானவர்கள் பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.