மிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட சுப்பையா என்பவர் குடும்பத்துடன் மலேசியாவில் வசித்து வருகிறார். அவரது மகள் கவிதா நெல்லை டவுன் சிக்கர்தர் தெருவைச் சேர்ந்த இம்ரான் என்பவர் மீது நெல்லை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்திருந்தார். அதில், தன்னை திருமணம் செய்து ஏமாற்றிய இம்ரான், வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முற்படுவதாக தெரிவித்துள்ளார்.
தோழி ஒருவரின் திருமணத்தில் சந்தித்துக் கொண்ட இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், பேஸ்புக் நண்பர்களான இருவருக்கும் இடையே இருந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இம்ரான் தன்னுடைய உண்மையான பெயரை மறைத்து அருண்குமார் என்று கூறி கவிதாவிடம் பழகியுள்ளார். இதுகுறித்து கவிதா பேசும்போது, அருண்குமார் என்ற பெயரில் பழகிய அருண்குமாரின் உண்மையான பெயர் இம்ரான் என்பதை நெருங்கிப் பழகிய போது தெரிந்து கொண்டேன். மதம் மாறி தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பெயரையும் தருண் என மாற்றிக் கொண்டார்.
மேலும் படிக்க | பெண் குரலில் பேசி 1.5 கோடி அபேஸ் செய்த பங்குச் சந்தை முதலீட்டாளர்
இந்து மதத்துக்கு மாறியதால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தருண் என்னிடம் வந்து கெஞ்சினார். அதை நம்பி கடந்த 30.10 2019 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள கோவிலில் இம்ரானை திருமணம் செய்து கொண்டேன். திருமணத்தை பதிவு செய்ய கூறியபோது துபாயில் முக்கிய வேலை இருப்பதால் பின்னர் பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறிவிட்டார். திருமணத்துக்கு பிறகு அவருடன் துபாய் சென்று விட்டேன். அதன் பிறகுதான் அவர் போலியாக பெயர் மாற்றம் செய்ததும், பிறப்பு சான்றிதழ் முதல் பல்வேறு சான்றிதழ்களை போலியாக தயாரித்தும் தெரியவந்தது.
நான் ஆறு மாதம் கர்ப்பமாக உள்ளேன். இதுகுறித்து கேட்டபோது பணத்திற்காக தான் ஏமாற்றி உன்னை திருமணம் செய்து கொண்டேன் என்று கூறி என்னை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார். அவரது சகோதரி மற்றும் தாயாரும் என்னை தொடர்பு கொண்டு பணம் தருமாறு மிரட்டுகின்றனர். என்னை ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணுடன் திருமணம் செய்ய முயற்சி செய்கிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். கவிதாவின் புகாரின் அடிப்படையில் நெல்லை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இம்ரான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் இதுவரை கைது செய்யப்படாததால் கவிதா தனக்கு நீதி கேட்டு நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்துள்ளார். இதுவரை 14 லட்சம் ரூபாய் பணம் இம்ரான் பணம் பறித்துள்ளதாகவும் கவிதா கூறியுள்ளார்.
மேலும் படிக்க | ஓபிஎஸ் தான் ஜல்லிக்கட்டு நாயகர்: விளக்கம் அளிக்கும் முன்னாள் முதலமைச்சர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR