Manikandan Bail Plea: முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமின் மனு தள்ளுபடி

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அவரது ஜாமின் மனு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அவருக்கு ஜாமின் அளிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 25, 2021, 04:15 PM IST
  • முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
  • இது குறித்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
  • 6 சட்டப்பிரிவுகளின் கீழ் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Manikandan Bail Plea: முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமின் மனு தள்ளுபடி  title=

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அவரது ஜாமின் மனு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அவருக்கு ஜாமின் அளிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது.

துணை நடிகை ஒருவர் அளித்த  புகாரின் பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் (Former Minister Manikandan) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருமணம் செய்துகொள்வதாக வாக்களித்து தன்னை ஏமாற்றியதாக அந்த நடிகை மணிகண்டன் மீது புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் கடந்த 20 ஆம் தேதி மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, நீதிமன்றத்தில் ஜாமின் கோரியிருந்தார் மணிகண்டன். இந்த ஜாமின் மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக, துணை நடிகை அளித்த புகாரில், மணிகண்டன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்களித்து ஏமாற்றியதாகவும், பலமுறை கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இது தவிர, தான் அவரை தொடர்புகொண்டபோது, தன்னை தரக்குறைவாகப் பேசியதாகவும், கூலிப்படையின் பேரில் மிரட்டியதாகவும் அவர் பல புகார்களை அளித்தார்.

ALSO READ:  ADMK EX Minister: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

இந்த புகாரை எடுத்துக்கொண்ட அடையாறு அனைத்து மகளிர் போலீசார் (TN Police) விசாரணை நடத்தினார்கள். 6 சட்டப்பிரிவுகளின் கீழ் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

முதலில் அந்த துணை நடிகையை யாரென்றே தெரியாது என கூறிய மணிகண்டன் மெல்ல மெல்ல தன் கூற்றை மாற்றத் தொடங்கினார். அவரை விசாரணைக்கு காவல் துறை தேடிய நிலை மணிகண்டன் தலைமறைவானார். தீவிர தேடலில் ஈடுபட்ட காவல் துறை இறுதியாக மணிகண்டனை பெங்களூருவில் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை அடையாறு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவின் படி, மணிகண்டனை ஜூலை 2 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில்,  சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்த நிலையில், பாலியல் புகாரில் (Sexual Harrasment Case) கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இது குறித்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையை அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டது. 

ALSO READ: சினிமா நடிகை கொடுத்த பாலியல் புகார்: முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News