வண்டலூருக்கு முதல்வர் வருகை - வெயிலில் வாடி வதங்கிய பொதுமக்கள்

முதலமைச்சர் ஸ்டாலின் வண்டலூர் உயிரியியல் பூங்காவிற்கு வருகை தந்ததால், அங்கு பொதுமக்களுக்கு தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கொளுத்தும் வெய்யிலில் கைகுழந்தைகளுடன் நின்று பொதுமக்கள் அவதியுற்றனர்.

Written by - Sudharsan G | Last Updated : Sep 24, 2022, 04:02 PM IST
  • வண்டலூர் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழாவில் முதலமைச்சர் பங்கேற்பு.
  • வனத்துறை சார்ப்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார்.
  • முதலமைச்சர் வருகையால் வண்டலூர் பூங்காவில் பொதுமக்களுக்கு சிறிதுநேரம் அனுமதி மறுக்கப்பட்டது.
வண்டலூருக்கு முதல்வர் வருகை - வெயிலில் வாடி வதங்கிய பொதுமக்கள் title=

சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர் உயிரியியல் பூங்காவில் மரகன்று நடும் நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் வருகையால் உயிரியியல் பூங்க நிர்வாகம் தற்காலிகமாக பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்க மறுப்பு தெரிவித்தது.இதனால், வண்டலூர் உயிரியியல் பூங்காவின் தலைமை நூழைவாயில் மூடப்பட்டது. 

தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் இருந்து விலங்குகளை குழந்தைகளுடன் பார்வையிட வந்த பொதுமக்கள் சுட்டெரிக்கும் வெய்யிலில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். தற்காலிகமாக அனுமதி மறுக்கபட்டாலும், பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாயினர்.

MK Stalin

இதுபோன்ற முக்கிய நிகழ்ச்சிகள் நடப்பது தெரிந்தவுடன், உயிரியியல் பூங்காவிற்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் இதனால், பொதுமக்களுக்கு சிரமத்திற்கு ஆளாக மாட்டார்கள் என்றும் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வண்டலூர் பூங்கா நிர்வாகத்தினரை கேட்டுகொண்டுள்ளனர். 

மேலும் படிக்க | TN Weather Forecast: இந்த மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

MK Stalin

மரக்கன்றுகள் நடும் விழாவை தொடர்ந்து, வண்டலூரில் நடைபெற்ற பசுமை தமிழ்நாடு இயக்க தொடக்க விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். தொடக்க விழாவில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளில் பொதுமக்கள் மரக்கன்றுகள் நடுதலைப்பற்றி தேவையான விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் வைக்கப்பட்டுள்ள எண்ம நூல்களை (Digital Book) பார்வையிட்டார். 

விழாவில் பசுமை தமிழ்நாடு இயக்கம் குறித்த ஆவண சிறப்பு மலரை வெளியிட்ட முதலமைச்சர், பசுமையாக்கல் மற்றும் மரம் வளர்ப்பு பணிகளில் சிறந்த முறையில் பங்காற்றியவர்களுக்கு சான்றிதழ்களையும் அவர் வழங்கினார். பசுமை தமிழ்நாடு இயக்கத்திற்கு தங்களது பங்களிப்பாக ஹுண்டாய் இந்தியா மோட்டார் நிறுவனம், மணலி தொழில் முனைவோர் கூட்டமைப்பு, பசுமை சுற்றுச்சூழல் பவுண்டேசன் தன்னார்வ தொண்டு நிறுவனம், மகளிர் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் 46 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சரிடம் அவர்கள் வழங்கினார்கள் . 

மேலும் படிக்க | பழனி முருகன் கோயிலில் மின் இழுவை ரயில் - சேவை தொடங்கியது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News