PM Narendra Modi Vellore Visit: வேலூர் மாவட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை, அதாவது ஏப்ரல் 10 ஆம் தேதி வருகைதர உள்ளார். அன்றைய தினம் பாதுகாப்பு பணியையொட்டி வாகன நெரிசலை தவிர்க்க மாவட்ட எஸ். பி. மணிவண்ணன் உத்தரவின் பேரில் வேலூர் வழியாக செல்லும் கனரக வாகனங்கள் செல்ல போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை அமலில் இருக்கும்.
போக்குவரத்து மாற்றம் குறித்த விவரத்தை இங்கே காணலாம்:
சித்தூர் செல்லும் வாகனங்கள்
குடியாத்தத்தில் இருந்து காட்பாடி வழியாக சென்னை செல்ல வேண்டிய வாகனங்கள் குடியாத்தம்- வடுகன்தாங்கல் காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தம் ஈ.பி கூட்ரோடு ராணிப்பேட்டை வழியாக சென்னைக்கு செல்லலாம். திருவண்ணாமலையிலிருந்து வேலூர் வழியாக சித்தூர் செல்லும் வாகனங்கள் திருவண்ணாமலை சாத்துமதுரை, பென்னாத்தூர், ஸ்ரீபுரம் கூட்ரோடு, கந்தனேரி, பள்ளிகொண்டா, குடியாத்தம், பரதராமி வழியாக சித்தூர் செல்லலாம்.
மேலும் படிக்க | ஆளுநர் பதவி ஒழிப்பு முதல் கச்சத்தீவு மீட்பு வரை! விசிக தேர்தல் அறிக்கை!
சென்னை திருவண்ணாமலை செல்லும் வாகனங்கள்
திருவண்ணாமலையிலிருந்து வேலூர் வழியாக சென்னை செல்லும் வாகனங்கள் திருவண்ணாமலை, சாத்துமதுரை, பென்னாத்தூர், ஸ்ரீபுரம் கூட்ரோடு, கந்தனேரி, தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னைக்கு செல்லலாம். சித்தூர் இருந்து வேலூர் வழியாக திருவண்ணாமலைக்கு செல்லும் வாகனங்கள் நரஹரிப்பேட்டை, ஈ.பி கூட்ரோடு திருவலம், இராணிப்பேட்டை, ஆற்காடு, திமிரி, ஆரணி வழியாக திருவண்ணாமலைக்கு செல்லலாம். சித்தூரில் இருந்து வேலூர் வழியாக சென்னை செல்லும் வாகனங்கள் சித்தூர், நரஹரிப்பேட்டை, ஈ.பி கூட்ரோடு திருவலம், இராணிப்பேட்டை வழியாக சென்னைக்கு செல்லலாம். சித்தூரில் இருந்து வேலூர் வழியாக பெங்களூரு செல்லும் வாகனங்கள் கிறிஸ்டியான் பேட்டை, காட்பாடி, குடியாத்தம் ரோடு சந்திப்பு, குடியாத்தம் வி.கோட்டா வழியாக பெங்களூரு செல்லலாம்.
வாகன ஓட்டிகள் நெரிசலை தவிர்க்க காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பொதுமக்களும் தங்கள் பயணத் திட்டத்தை இந்த மாற்று ஏற்பாடுகளுக்கு ஏற்றார் போன்று மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் வேலூர் மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | எடப்பாடி பழனிச்சாமி திமுகவிற்கு உதவி செய்து வருகிறார் - டிடிவி தினகரன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ