விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக். 60 வயது முதியவரான இவர் வளர்த்து வந்ததாக கூறப்படும் பசு மாடு, 10 நாட்களுக்கு முன் காணாமல் போனது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதற்கிடையில், கூட்ரோட்டைச் சேர்ந்த விக்னேஸ்வரன், என்பவரின் வீட்டில், மாடு ஒன்று கன்று ஈன்றுள்ள தகவல் அசோக்கிற்கு தெரிய வந்தது. விக்னேஸ்வரனின் வீட்டிற்கு விரைந்த அசோக், தன்னுடைய மாடு என கூறி கேட்டுள்ளார். அவர் தராததால் பசு மாட்டை மட்டும் தனது வீட்டிற்கு ஓட்டி வந்து விட்டார்.
தகவலறிந்த விக்னேஸ்வரன், அசோக் வீட்டிற்குச் சென்று, தன்னுடை மாட்டை திருப்பித் தருமாறும், ஏன் மாட்டை கொண்டு வந்தீர்கள் என்றும் கேட்டுள்ளார். இதனால், இருவருக்குமிடையே தகராறு (Dispute between two parties) ஏற்பட்டது.
அதையடுத்து ஆரோவில் போலீசார், இரு தரப்பினரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருதரப்பினரும் விட்டுக் கொடுக்காமல் மாடு தங்களுடையது என வாதம் செய்தனர்.
Also Read | உசிலம்பட்டியில் பச்சிளம் குழந்தை மரணம் பெண் சிசுக்கொலையா?
இதனால், மாடு யாருடையது என்பதை விசாரித்து முடிவு செய்ய திட்டமிட்ட போலீசார் பசு மாடு தங்களுடையது என்பதற்கான ஆதாரத்தை எடுத்து வருமாறு கூறி இரு தரப்பினரையும் போலீசார் அனுப்பி வைத்தனர்.
மேலும், பிரச்னை முடிவுக்கு வரும் வரை பசுவையும், கன்றையும் பிரிக்க வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தினர். அதனால் மாட்டையும், கன்றையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விடும்படி அசோக் மற்றும் விக்னேஸ்வரனிடம் போலீசார் அறிவுறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, இருவரும் பசுவையும், கன்றையும் ஓட்டி வந்து ஆரோவில் போலீஸ் நிலையத்தில் கட்டினர். பசுவையும், கன்றையும் மூன்று நாட்களாக காவல்துறையினர் பராமரித்து வருகின்றனர். தடியைத் தூக்கும் கைகள், கால்நடைகளுக்கு வைக்கோல் போட்டு பராமரிக்கின்றன.
ALSO READ | அம்மாவை பற்றி எல்லை மீறி தவறான வதந்திகள் பரப்பப்படுவதாக புகார்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR