இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகரும் என்றும், அடுத்த சில நாட்களில் மீண்டும் வலுவான புயலாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாகப்பட்டினம், புதுவை, சென்னை போன்ற இடங்களில் அதிக மழை இருக்கும் என்று கூறப்படுகிறது. நேற்று காலை கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் அருகே கடலில் பலத்த சூறைக்காற்று வீசியது. இந்த புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகரத் தொடங்கியது. இது இன்று காலை தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் வானிலையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.
மேலும் படிக்க | 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... சென்னையில் எப்போது மழை? - லேட்டஸ்ட் வானிலை அப்டேட்
எப்போது மழைக்கு வாய்ப்பு?
நவம்பர் 25, 2024 அன்று, கடலோர தமிழகத்தின் சில பகுதிகளிலும், தமிழகத்தின் நடுப்பகுதி, புதுவை மற்றும் காரைக்காலின் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 26, 2024 அன்று, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால் போன்ற சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை போன்ற இடங்களிலும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேலும், ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டின் சில பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நவம்பர் 27, 2024 அன்று, தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். கடலூர், மயிலாடுதுறை, காரைக்காலில் சில இடங்களில் கனமழையும், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, விழுப்புரம் ஆகிய இடங்களில் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்யும். ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
நவம்பர் 28, 2024 அன்று, தமிழகத்தில் உள்ள புதுவை மற்றும் காரைக்காலில் சில இடங்களில் சிறிதளவு அல்லது அதிக மழை பெய்யக்கூடும். இடி மற்றும் மின்னலுடன் கூட இருக்கலாம். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், சென்னை மற்றும் இன்னும் சில இடங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நவம்பர் 29, 2024 அன்று, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலின் சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நவம்பர் 30, 2024 அன்று, தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலின் சில பகுதிகளில் சிறிது மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையில் வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த சில நாட்களுக்கு சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்யக்கூடும், மேலும் சில இடங்களில் இடி மற்றும் மின்னலைக் காணலாம். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சம் 24-25 டிகிரி செல்சியஸ் இருக்கும்.
மேலும் படிக்க | தமிழக அரசுக்கு தமிழக வெற்றிக் கழக சார்பில் விஜய் வைத்துள்ள கோரிக்கை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ