தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ் இருவரும் காவல் துறையினர் தாக்கியதில் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தந்தை மகன் உயிரிழந்தது தொடர்பாக பதியப்பட்ட வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இதன் தொடர்பான வழக்கு விசாரணை 2ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் மீதான விசாரணை மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி பத்மநாபன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் முக்கிய சாட்சியான ஸ்ரீதரின் ஓட்டுநரும் தலைமைக் காவலருமான ஜெயசேகர், நேரில் ஆஜராகி நடந்ததை விளக்கினார்.
மேலும் படிக்க | விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை- சிறார்கள் 4 பேருக்கும் ஜாமீன்
அதில் சம்பவத்தன்று காவல்துறை வாகனத்தின் அருகே ஜெயசேகர் இருந்ததாகவும், காவல் நிலையத்தின் உள்ளே இருந்து ஜெயராஜ் பென்னிக்ஸ் இருவரின் கதறல் சத்தம் கேட்டதாகவும் கூறியுள்ளார். மறுநாள் காலை இருவரின் உடல் மற்றும் ஆடைகளில் ரத்தம் இருந்ததாகவும் ஜெயசேகர் சாட்சியளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் படிக்க | 21 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி அறிவழகன் - குண்டர் சட்டத்தில் கைது..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR