Savukku Shankar | என்னை போலி என்கவுண்டர் செய்ய காவல்துறை திட்டம் - சவுக்கு சங்கர்

Savukku Shankar | சவுக்கு சங்கர் எக்ஸ் பக்கத்தில் எழுதியிருக்கும் பதிவில், தன்னை போலி என்கவுண்டரில் கொல்ல காவல்துறை சதித்திட்டம் தீட்டி வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 20, 2024, 08:53 PM IST
  • சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
  • என்னை என்கவுண்டர் செய்ய திட்டம்
  • சென்னை காவல்துறை புதிய வழக்கு போடவும் ஆயத்தம்
Savukku Shankar | என்னை போலி என்கவுண்டர் செய்ய காவல்துறை திட்டம் - சவுக்கு சங்கர் title=

Savukku Shankar, Encounter | யூடியூபர் சவுக்கு சங்கர் இப்போது எக்ஸ் பக்கத்தில் எழுதியிருக்கும் பதிவில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அருண் தன்னை புதிய வழக்கில் கைது செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிவிதுள்ளார். மேலும், ஒரு போலி என்கவுண்டர் செய்ய திட்டமிட்டிருக்கிற செய்தியும் உலா வருவதாக அந்த பதிவில் கூறியுள்ளார். தான் நீதிமன்றங்களை நம்புவதாகவும், உயிரோடு இருந்தால் இப்போது செய்யும் பணிகளை மீண்டும் தொடர்ந்து செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார். 

பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது தேனி காவல்துறை கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்த நிலையில், திடீரென குண்டர் சட்டமும் அவர் மீது போடப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்துரையின்பேரில் தேனி மாவட்ட ஆட்சியர் சவுக்கு சங்கரை மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனால் அவர் மீது இரண்டாவது முறையாக குண்டர் சட்டம் போடப்பட்டது.

மேலும் படிக்க | 'நாங்க ஆட்சிக்கு வந்தா... தமிழ்த்தாய் வாழ்த்தை தூக்கிவிடுவோம்' கொந்தளித்த சீமான் - காரணம் என்ன?

இதனை எதிர்த்து சவுக்கு சங்கர் தாயார் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தபோது, சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை, குண்டர் தடுப்பு சட்ட அறிவுரைக் குழு ஏற்றுக்கொள்ளவில்லை, அந்த குழுவின் பரிந்துரையின்படி, அவர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை திரும்பப் பெற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்துடன் வேறு வழக்குகள் ஏதும் நிலுவையில் இல்லையென்றால் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யவும் உத்தரவிட்டது.

இதன்பிறகு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த உடனே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். அதன்பிறகு யூடியூபிலும் தொடர்ச்சியாக பேட்டிகள் கொடுக்க ஆரம்பித்தார். அதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார்.

இந்த சூழலில் தான், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அருண் தன்னை வேறொரு புதிய வழக்கில் கைது செய்ய திட்டம் தீட்டி வருவதாகவும், போலி என்கவுண்டர் குறித்த செய்தியும் உலா வந்து கொண்டிருப்பதாக சவுக்கு சங்கர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். நீதிமன்றங்களை முழுமையாக நம்புவதாகவும், தன் மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றங்கள் தூக்கி எறியும் என்றும் தெரிவித்துள்ளார் அவர். நான் உயிருடன் இருந்தால் நான் வெளியே வந்து இதுவரை செய்து வந்த வேலைகளை மீண்டும் தொடருவேன் என்றும் சவுக்கு சங்கர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். சவுக்கு சங்கரின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும் படிக்க | மாநாடு நடைபெற உள்ள நிலையில் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News