Shocking Accident: பயங்கர லாரி விபத்தில் பரிதாபமாய் உயிர் இழந்த பள்ளி ஆசிரியர்

மனித வாழ்க்கை ஸ்திரமற்றது. அவ்வபோது நடக்கும் விபத்துகளும், எதிர்பாரா சம்பவங்களும் இதை மீண்டும் மீண்டும் நினைவூட்டுகின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 22, 2021, 09:15 PM IST
Shocking Accident: பயங்கர லாரி விபத்தில் பரிதாபமாய் உயிர் இழந்த பள்ளி ஆசிரியர்  title=

மனித வாழ்க்கை நிலையற்றது. ஒரு நிமிடம் சாதாரணமாக, வழக்கமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் ஒரு நபர் அடுத்த நிமிடமே உயிரோடிருப்பதில்லை. சில நேரம் நம் முன்னால் சென்று கொண்டிருக்கும் ஒரு நபர், கண் இமைக்கும் நேரத்தில் விபத்துக்குள்ளாகி இறப்பதை நம்மில் பலர் பார்த்திருப்போம். அப்படிப்பட்ட பரிதாபமான சம்பவம் ஒன்று தருமபுரி அருகே நடந்துள்ளது.

தருமபுரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு அரசுப்பள்ளி ஆசிரியர் மீது ஒரு டிப்பர் லாரி மோதியதால், அவர் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

இந்த விபத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் (Social Media) அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

 

விபத்துக்குள்ளான (Accident) ஆசிரியரின் பெயர் முத்துராஜ். இவர் தருமபுாி மாவட்டத்தில் உள்ள ஏ.செக்காரப்பட்டி கிராமத்தை சோ்ந்தவா் . முத்துராஜ் பென்னாகரம் அருகிலுள்ள மாங்கரை அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். 

ALSO READ: Viral Video: நடுங்க வைக்கும் வீடியோ; இதயம் பலவீனமானவர்கள் பார்க்காதீர்கள்!

இன்று காலை முத்துராஜ் இன்று காலை வழக்கம்போல், தன்னுடைய வீட்டிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அவர் சென்றுகொண்டிருந்தபோது, அவர் சற்றும் எதிர்பாராத விதத்தில் அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி சற்று நிலை தடுமாறி முத்துராஜின் இருசக்கர வாகனத்தின் மீது பட்டது. 

இதில் தனது சமநிலையை இழந்த முத்துராஜ் தனது வண்டியுடன் கீழே விழுந்தார். விழுந்த முத்துராஜ் மீது லாரியின் பின்பக்க சக்கரம் ஏறியதன் காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். 

விபத்து குறித்த தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர். இந்த விபத்து குறித்த விசாரனை நடந்து வருகிறது. மேலும், ஆசிரியர் முத்துராஜ் மீது இடித்த லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடந்து வருகிறது.

 இதனிடையே, விபத்து காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

ALSO READ: Viral video : காரில் கரடி, கரடியை கண்டு கதறிய பெண்!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News