திமுக ஆட்சியில் பெண்களுக்கு நிறைய சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சியில் அமர்ந்ததும் சாதாரணக் கட்டணம் வசூலிக்கப்படும் மாநகர, நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் போக்குவரத்துத் துறைக்கு இழப்பு ஏற்பட்டாலும் பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பைச் செய்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
வேலைக்குச் செல்லும் பெண்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மாதந்தோறும் மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி மட்டும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக, அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் உயர்கல்வி படிப்பதற்காக மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு பொது பட்ஜெட்டில் அறிவித்தது.
கல்லூரிப் படிப்பு, தொழில் கல்வி படித்தாலும் இந்த உதவித்தொகை கிடைக்கும் என்பதால் சமூக ஆர்வலர்கள், பெண்ணியச் செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் இதனைப் பெரிதும் வரவேற்றனர்.
மேலும் படிக்க | ’பைக்ரேஸ்’ வாலிபருக்கு வார்டு பாயாக பணியாற்ற உத்தரவு
இந்நிலையில் பெண்களுக்கு மேலும் ஓர் அட்டகாசமான சலுகையைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் ( படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனப் பேருந்துகள் மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம்/ குளிர்சாதனமில்லா பேருந்துகள் ) பெண்களுக்குத் தனியாக படுக்கை எண் 1 LB மற்றும் 4LB ஒதுக்கீடு செய்து இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே, இனிவரும் காலங்களில் மேற்படி படுக்கையில் முன்பதிவு செய்த பெண் பயணிகளுக்குப் படுக்கையை ஒதுக்கீடு செய்து தரவும், பேருந்து புறப்படும் வரை மேற்கூறிய படுக்கையில் பெண் பயணிகள் எவரும் முன்பதிவு செய்யாத பட்சத்தில் அதனைப் பொதுப் படுக்கையாகக் கருதி மற்ற பயணிகளுக்கு ஒதுக்கீடு செய்து தர வலியுறுத்தப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கென்று தனிப் படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்பைப் பெற்று வருகிறது.
மேலும் படிக்க | மொபைல் ரீசார்ஜ்: 28 நாள் வேலிட்டிட்டி குறித்து TRAI வழங்கிய முக்கிய உத்தரவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G