TN Assembly Elections Result 2021: தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்ப முதலே திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
தற்போது முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. சட்டமன்ற தேர்தலில் (TN Assembly Election 2021) அதிமுக, திமுக, மநீம, அமமுக, நாம் தமிழர் ஆகிய 5 கட்சிகள் போட்டியிட்டன. இருப்பினும் வாக்கு எண்ணிக்கையின் படி திமுக மற்றும் அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
79 இடங்களில் திமுக (DMK) கூட்டணியினர் முன்னிலையில் உள்ளனர். அதேபோல், அதிமுக (AIADMK) கூட்டணியினர் கடலூர், காட்பாடி, கும்பகோணம், ஆரணி, மொடக்குறிச்சி உள்ளிட்ட 58 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர்.
ALSO READ | Tamil Nadu Election Results 2021 Live: தபால் வாக்கு - திமுக கூட்டணி முன்னிலை
இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வேளச்சேரி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மவுலானா அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தான் போட்டியிட கொளத்தூர் தொகுதியின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR