Tamil Nadu Latest News Updates: கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 153ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு திருநெல்வேலியில் உள்ள வஉசி மணிமண்டபத்தில் உள்ள அவருடைய சிலைக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
அதேபோல், பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,"மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து போர்க்கொடி தூக்குகிறார்கள், திமுக கூட்டணியினர். ஆனால் அவர்கள் ஆளும் தமிழ்நாட்டில் பெண் போலீசார் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்.
பள்ளிகளில் போதை பொருள்...
அமெரிக்காவில் சைக்கிள் ஒட்டிக் கொண்டிருக்கும் முதல்வருக்கு இங்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. பள்ளி, கல்லூரி வாசல்களில் கஞ்சா, அபின் போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது" என குற்றஞ்சாட்டினார்.
பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கப்பலோட்டிய தமிழன் திரு வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 153 வது பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி சட்டமன்றத்தில் உள்ள மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவர் திரு தயாசங்கர் அவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து… pic.twitter.com/J0bjd8htu0
— Nainar Nagenthiran (@NainarBJP) September 5, 2024
மேலும் படிக்க | கிசுகிசு : குடைச்சல் கொடுக்கும் கதர் புள்ளி - கடுப்பில் ஆளும் தரப்பு..!
அண்ணாமலை வெளிநாடு சென்றதை தொடர்ந்து தமிழக பாஜக குழு அமைக்கப்பபட்டது. இந்த குழுவில் உங்களுடைய பெயர் இடம் பெறவில்லை என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு,"அது தொடர்பாக கட்சி தலைமை முடிவு செய்து ஒரு குழுவை அமைத்திருக்கிறது. தமிழகத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை கேட்டு அறிவதற்காக அந்த குழு தலைவர் ஹெச். ராஜா டெல்லி சென்றுள்ளார்" என்று விளக்கம் அளித்தார்.
விஜய் கண்டு பயப்படுகிறதா...?
நடிகர் விஜய் கட்சியின் மாநாட்டுக்கு அனுமதி கொடுப்பதால் விஜய்யை கண்டு திமுக பயப்படுகிறதா என செய்தியாளர்கள் கேள்விக்கு,"யார் கட்சி ஆரம்பித்தாலும் அவர்கள் மாநாடு நடத்துவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும். அப்படி அனுமதி கொடுத்துவிட்டால் இதுபோன்ற பிரச்சனைகள் வராது. இப்போது அனுமதி கொடுக்க 21 கேள்விகள் கேட்பதன் மூலம் விஜய்யை கண்டு திமுக அஞ்சுகிறது என்று தோன்றுகிறது" என்றார்.
விஜயதாரணி தனக்கு பதவி வழங்கப்படவில்லை என கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு,"விஜயதாரணிக்கு பதவி கொடுத்திருக்க வேண்டும். அதில் தற்போது காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் அவர் வருத்தப்பட வேண்டாம். வரும் காலத்தில் அவருக்கு உரிய பதவி கொடுக்கப்படும். பாஜகவில் எனக்கும் பதவி இல்லை.
அதிமுக உடனான கூட்டணி
அதிமுகவில் பல உயர்ந்த பதவிகளில் இருந்து விட்டு பாஜகவிற்கு வந்தேன். மாநில துணைத்தலைவர் பதவி கொடுத்தார்கள். தற்போது சட்டமன்ற குழு தலைவராக மட்டும் இருக்கிறேன். 40 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் குழு தலைவர்தான், நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் குழு தலைவர்தான்.
திமுக ஆட்சியில் விளம்பரத்திற்கு அதிக செலவு செய்து வருவதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியாமல் உள்ளது. எப்போது திமுக ஆட்சிக்கு வந்தாலும் திட்டங்களை விட விளம்பரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகையை இரண்டு ஆண்டுகள் கழித்து நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு வழங்கியிருக்கிறார்கள்" என்றார்.
2026ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் இணக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு,"அதிமுகவுடன் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி தான்" என்றார். தமிழகம் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி வளர்கிறதா தற்போது முதலீடுகளை ஈர்க்க தமிழக முதலமைச்சர் அமெரிக்கா சென்று உள்ளாரே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். "சீனி சக்கர சித்தப்பா ஏட்டில எழுதி நக்கப்பா" என பதிலளித்தார்.
மேலும் படிக்க | தமிழ்நாட்டில் முதன்மையாக பெண்கள் நடத்திய யாகசாலை பூஜை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ