சென்னை: கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜுவுக்கு (Sellur K. Raju) கொரோனா வைரஸ் (Coronavirus) இருப்பது கண்டறியப்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூலை 4 ஆம் தேதி, செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்தி (Sellur K. Raju Wife) அவர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா நோய்த்தொற்றுக்கு சாதகமான அறிகுறி இருப்பது தெரியவந்ததும், மனப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
இந்த செய்தியும் படிக்கவும் | தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த DMK MLA ஜெ.அன்பழகன் காலமானார்
இதைத் தொடர்ந்து, செல்லூர் ராஜுவும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார், மேலும் அவரது சோதனை முடிவு எதிர்மறையாக இருந்தது. அதேசமயம், இன்று மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் (Corona Posstive) இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு அமைச்சர்களான கே பி அன்பழகன் மற்றும் பி தங்கமணியைத் தொடர்ந்து மூன்றாவது அமைச்சராக செல்லூர் ராஜுவுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த செய்தியும் படிக்கவும் | தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா
இதற்கிடையில், கொரோனா வைரஸ் (COVID-19) நிலைமையை மறுஆய்வு செய்ய சென்னையில் உள்ள மத்திய குழுவுடன் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமியுடன் இன்று தலைமை செயலகத்தில் கலந்துரையாடினார்.
தமிழ்நாட்டில் கோவிட் -19 பரவுதல் மற்றும் கட்டுப்பாட்டு குறித்து மதிப்பிட்ட பிறகு, மத்திய சுகாதார அமைச்சின் கூடுதல் செயலாளர் ஆர்டி அஹுஜா தலைமையிலான மத்திய அதிகாரிகள் குழு விரைவில் மத்திய அரசுக்கு ஒரு அறிக்கையை அனுப்பும்.
இந்த செய்தியும் படிக்கவும் | முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ பி.வளர்மதிக்கு கொரோனா தொற்று...!!