தமிழகத்தில் இல்லம் தேடி மருத்துவ திட்டம் போல உலகிலேயே இல்லை, இது போன்ற திட்டங்களை அண்டை மாநிலங்களில் வாக்குறுதிகளாக அளித்து அங்குள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள் வெற்றி அடைகின்றனர் என ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மா.சுபிரமணியன் பேசி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக , அதிமுக, பாஜக, பாமக போன்ற கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் திமுக சார்பில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க | இந்தியாவின் பணக்கார மாநிலங்களின் பட்டியல்! தமிழ்நாட்டிற்கு எந்த இடம் தெரியுமா?
இதில் தமிழக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், தமிழக மருத்துவ துறை அமைச்சர் மா .சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று தேர்தலை சந்திக்க நிர்வாகிகள் எவ்வாறு செயல்படுவது எனபது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். அப்போது கூட்டத்தில் பேசிய அமைச்சர் மா.சுபிரமணியன், பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தக்கூடிய இல்லம் தேடி கல்வித் திட்டம், விளையாட்டு திட்டம், பேராசிரியர் அன்பழகனின் கல்வி சார்ந்த கட்டிடங்கள் மேம்படுத்துவதற்கான திட்டம் மற்றும் மருத்துவத்துறையில் செயல்படுத்தக்கூடிய இன்னுயிர் காக்கும் திட்டம் மக்களை தேடி மருத்துவம் போன்ற திட்டங்களை அண்டை மாநிலங்களில் மக்களுக்கு வாக்குறுதிகளாக அரசியல் கட்சியினர் அளித்து வெற்றி பெற்று வருகின்றனர் என பெருமிதம் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் சென்னை மதுரவாயலில் இருந்து துறைமுகம் வரை 19 கிலோமீட்டர் தொலைவிற்கு 2 அடுக்கு பறக்கும் மேம்பாலம் அமைய உள்ளது, இந்த மேம்பாலம் அமைப்பதன் மூலம் சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு விடிவு காலம் பிறக்கும் என்றார். இந்திய வரலாற்றிலேயே 2019 மக்களவைத் தேர்தலில் ஶ்ரீபெரும்புதூர் தொகுதி ஐந்து லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெருமையை ஸ்ரீபெரும்புதூர் பெற்றுள்ளது என கூறினார். இதைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அமைச்சர் தா. மோ. அன்பரசன், சென்ற தேர்தல் பிரச்சாரத்தில் இந்திய மக்களின் பணம் கருப்பு பணங்களாக வெளிநாட்டில் உள்ளது. கருப்பு பணங்களை கைப்பற்றி ஒவ்வொரு குடும்ப வங்கி கணக்குகளில் 15 லட்சம் செலுத்தப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்தது. இதுவரை உங்களின் வங்கி கணக்குகளுக்கு பணம் வந்து சேர்ந்துள்ளதா என கேள்வி எழுப்பினர்.
இந்தியாவில் உள்ள இரண்டு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த தருவதாக கூறிய ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது. தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையம், கடலூர் என்எல்சி நிறுவனம் , ரயில்வே போன்றவற்றில் தமிழக மக்கள் வேலை செய்து வருவதாக தெரியவில்லை. ஆனால் ஒன்றிய அரசு அறிவித்த வாக்குறுதிகளை அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் நாங்கள் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தந்துள்ளோம் என கூறினார்.
மேலும் படிக்க | இந்துகளுக்கு எதிரான கட்சியே பாஜக தான்... ஏன் தெரியுமா? - கனிமொழி சொல்லும் பாயிண்ட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ