தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலோ, இடைத்தேர்தலோ வரப்போவதில்லை... நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து பொதுத்தேர்தலும் வரப்போகிறது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்!
சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை கழகத்தில் இன்று கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாவட்ட கழக விவசாய அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் கழக துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், ப.பார்த்தசாரதி,Ex:MLA., கழக விவசாய அணி செயலாளர் திரு.பொன்.பாலகிருஷ்ணன் மற்றும் அனைத்து மாவட்ட கழக விவசாய அணி செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இடைத்தேர்தலை கண்டு அதிமுக பயப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலோ, இடைத்தேர்தலோ வரப்போவதில்லை... நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து பொதுத்தேர்தலும் வரப்போகிறது என்பது தான் உன்மை என தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தற்போதைய நிலை மாறவேண்டும் எனில் லஞ்ச ஊழல் இல்லாத தேர்தல் நடைபெறவேண்டும், நல்ல தலைவரை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் பரவி வரும் டெங்கு, பன்றிகாய்ச்சல் குறித்து தெரிவித்த அவர்.. வேகமாக பரவி வரும் டெங்கு, பன்றிக்காய்ச்சலை தடுக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.