சென்னை உயர் நீதிமன்றம் திங்களன்று மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியது. தேசியக் கொடி சித்தரிக்கப்பட்டுள்ள ஒரு பெரிய கேக்கை வெட்டி பின்னர் அதை சாப்பிடுவது தண்டனைக்குரிய குற்றமாக கருத முடியாது என்று நீதிமன்றம் கூறியது. தேசிய சின்னங்கள் அவமதிப்பு தடுப்புச் சட்டம், 1971 இன் கீழ், தேசியக் கொடியை அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது.
இருப்பினும், தேசியக் கொடியை சித்தரிக்கும் ஒரு பெரிய கேக்கை வெட்டி சாப்பிடுவது சம்பந்தப்பட்ட சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாக கருத முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் திங்களன்று தீர்ப்பளித்தது.
ALSO READ | TN Assembly Election 2021: வெளியானது பாஜகவின் தேர்தல் அறிக்கை..!!
கோயம்புத்தூரில், ஒரு போலீஸ்காரர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி என் ஆனந்த் மற்றும் நீதிபதி வெங்கடேஷ் ஆகியோர் இந்த தீர்ப்பை வழங்கினர். மேலும் இதுபோன்ற செயலை தேசிய சின்னங்கள் அவமதிப்பு தடுப்புச் சட்டம், 1971 இன் பிரிவு 2 இன் கீழ் குற்றமாகக் கருத முடியாது என்று கூறினார்.
கிறிஸ்மஸைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பொது விழாவில் ஆறு அடி நீளமும் ஐந்து அடி அகலமும் கொண்ட ஒரு கேக் வெட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது, அதில் ஒரு இந்திய வரைபடம் மற்றும் மூவர்ணக் கொடி சித்தரிக்கப்பட்டிருந்தது, நடுவில் அசோக சக்கரமும் சித்தரிக்கப்பட்டிருந்தது.
வெட்டப்பட்ட கேக் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் 1000 குழந்தைகள் உட்பட சுமார் 2,500 பேருக்கு விநியோகிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கோவையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரியும் கலந்து கொண்டனர்.
இது தேசியக் கொடியை அவமதிக்கும் செயல் எனக் கூறி இந்து பொதுக் கட்சியைச் சேர்ந்த டி.சந்தில்குமார் போலீஸ் புகார் அளித்திருந்தார். இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதபோது, அவர் உள்ளூர் நீதிமன்றத்தை நாடினார், இதை அடுத்து 2017 பிப்ரவரி 17, 2017 அன்று, சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ் குற்றம் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தாக்கல் விசாரித்த நீதிபதி, தேசபக்தி என்பது ஒரு பொருள், அல்லது ஒரு செயலால் தீர்மானிக்கப்படுவதில்லை என்று கூறினார். செயலின் பின்னால் உள்ள நோக்கமத்தை பொருத்தே அதை முடிவு செய்ய வேண்டும் என்றார்.
ALSO READ | தேர்தல் வேட்பாளர்களுக்கு கொரோனா; டிஜிட்டல் பிரச்சாரத்தில் இறங்கும் வேட்பாளர்கள்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR