தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 17ஆம் தேதி காலை 11 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது!!
சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல், புதிய தொழில் தொடங்க அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவைக் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலுக்கு கூடுதல் நிதிஒதுக்கீடு செய்வது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. அண்மையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இங்கிலாநது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தபோது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில், தமிழகத்தில் பல்வேறு நிறுவனங்களுக்கு தொழில் தொடங்க அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
துணை முதலமைச்சரின் அமெரிக்கா சுற்றுப்பயணத்தின்போது, பெறப்பட்ட முதலீடுகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.