சென்னை: தமிழ்நாட்டில் அதிக விலைக்கு ரெம்டெசிவிர் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் (Goondas Act) கீழ் தமிழக போலீஸ் நடவடிக்கையை எடுக்கும் என்று தமிழக முதல்வர் மு,க. .ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) எச்சரித்துள்ளார். மக்களின் உயிர்காக்கும் ஆக்ஸிஜனுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையிலும், ரெம்டெசிவிர் மருந்து கறுப்புச் சந்தையில் அதிக விலைக்கு விற்றதாகக் கூறி பலரை மாநில காவல்துறையினர் கைது செய்துள்ள நேரத்தில் முதல்வரின் எச்சரிக்கை வந்துள்ளது.
கொரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, சிகிச்சை அளிக்க ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரை செய்யப்படுகிறது. இதனால் பலர் ரெம்டெசிவிர் (Remdesivir) மருந்து வாங்க கூட்டம் கூட்டமாக மக்கள் மருந்து கிடைக்கும் கவுண்டர்களில் வரிசையில் நிற்கின்றனர்.
தமிழ்நாட்டில் ரெம்டெசிவிர் மருந்தின் பெரும் தேவை காரணமாக மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதைத் தடுக்கும் பொருட்டு, தமிழக அரசு மருந்து விற்பனை கவுண்டரை சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உட்புற மைதானத்திற்கு மாற்றியது. இருப்பினும், சனிக்கிழமையன்று நூற்றுக்கணக்கான மக்கள் மருந்து வாங்கும் முயற்சியில் புதிய கவுண்டர் முன்பு திரண்டனர். அதாவது மருத்துவரின் ஆலோசனை பெற்று, அவரிடம் இருந்து மருந்து சீட்டை பெற்றுக் கொண்டு நோயாளிகளின் உறவினர்கள், ரெம்டெசிவிர் மருந்தை வாங்க, ஆயிரக்கணக்கானோர் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் குவிந்தனர். மக்களின் கூட்டம் அலை மோதியதால் தள்ளு முள்ளுகள் ஏற்பட்டன. இது சம்பந்தமான காணொளி மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
ALSO READ | ரெம்டெசிவிர் மருந்தை வாங்க சென்னையில் அலை மோதும் மக்கள் கூட்டம்!
இதனையடுத்து, முதல்வர் ஸ்டாலின் (TN CM MK Stalin) தரப்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், "பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் தடைகள் இருந்தபோதிலும், ஊரடங்கு என்ற "கசப்பான மருந்தை" ஏற்றுக்கொண்டு, அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து வரும் நிலையில், சில "சமூக விரோத சக்திகள்" ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி வைத்து கறுப்பு சந்தையில் விற்பனை செய்கிறார்கள். இதேபோல், சில இடங்களில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. தொற்றுநோய்களின் போது இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது குற்றமாகும் "என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அதிக விலையில் விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார்.
பல மருத்துவ வல்லுநர்களும், தமிழக அரசின் (TN Govt) பொது சுகாதார மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரும் "ரெம்டெசிவிர்" ஒரு உயிர் காக்கும் மருந்து அல்ல என்று பலமுறை கூறியுள்ளனர். COVID-19 சிகிச்சையில் ரெம்டெசிவிர் கணிசமான பங்கை வகிக்கிறார் என்பதற்கு போதுமான அறிவியல் ஆதாரம் இல்லை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் ரெம்டெசிவிர் மருந்தை வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக கூடி வருகின்றனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.
ALSO READ | ரெம்டெசிவிர் மருந்து வாங்க அலைமோதும் மக்கள்
அதேபோல தமிழகத்திற்கான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மற்றும் கொரோனா தடுப்பூசிகளை அதிகமாக வழங்க வேண்டும் என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR