தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைவு ஆகியவற்றின் காரணமாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வந்தது. கடந்த வாரம் ரூ60 முதல் ரூ 80 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று ரூ100ஐ தாண்டியது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ105 முதல் ரூ125வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் உணவங்கள் நடத்துபவர்கள் தக்காளி வாங்கும் அளவு கணிசமாக குறைத்துள்ளனர்.
தக்காளியின் விலை கேட்டதும் அதிர்ச்சியடையும் இல்லத்தரசிகளும் தக்காளி வாங்குவதை குறைத்து கொண்டிருக்கிறார்கள். சரியாக ஒரு மாதம் முன்பு ரூ30 முதல் ரூ60 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி கோடை காலத்தில் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடர் மழையின் காரணமாக தக்காளியின் உற்பத்தியில் தடை ஏற்பட்டது.
மேலும் படிக்க | களிமேடு தேர் விபத்து : அப்பர் சிலைக்கு சிறப்பு பூஜை.!
இதற்கிடையே தற்போது, சிறிதளவு விளைச்சலை பார்த்து தக்காளியை சந்தைக்கு கொண்டு விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் ஓரளவு மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால், இல்லத்தரசிகள் மத்தியில் இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தற்போது ரூ100க்கு விற்பனையாகும் தக்காளி ரூ150ஐ தொடும் அச்சமும் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க | உருவ கேலி செய்ததால் ஆத்திரம்! நண்பனை கொன்று வெறிச்செயலில் ஈடுபட்ட மாணவன்.!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!