சென்னை: முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் ஆருயிர் தோழியான திருமதி சசிகலா நடராஜன் இன்று கட்சியின் மூத்தத் தலைவர்களின் நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
அதிமுகவின் பொன்விழா கொண்டாட்டங்கள் நாளை முதல் தொடங்கவிருக்கிறது. இந்த நிலையில் இன்று காலை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அண்ணா என கட்சியின் மூத்தவர்களின் நினைவிடத்திற்கு சென்ற சசிகலா அறிவிப்பு ஏதாவது வெளியிடுவார் என்ற ஆவல் அனைவரிடமும் இருந்தது.
அதற்கு முன்னதாக, சசிகலாவின் சமாதி விஜயம் குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், அதிமுக-வில் சசிகலா-விற்கு இடமில்லை; ஆஸ்கர் வாங்கும் அளவிற்கு நடித்தாலும், மக்கள் அவர்களை நம்பமாட்டார்கள் என்று நக்கல் செய்திருந்தார்.
ALSO READ | விரைவில் வருகிறேன் எல்லோரையும் சந்திக்கிறேன்! - சசிகலா!
யானை பலம் பொருந்திய அதிமுக-வை கொசு, தாங்கிப் கொண்டிருப்பதாகக் கூறுவதா? என்றும் அவர் சற்று நேரத்துக்கு முன்னதாக பேட்டியளித்திருந்தது அனைவரின் ஆவலையும் தூண்டியது.
ஏனென்றால், ஜெயலலிதாவின் சமாதியில் சசிகலா செய்த சபதமும், அன்றைய முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் தியானமும் என்றும் மறக்க முடியாதது. சசிகலா இன்று சபதம் செய்வாரா, தியானம் கலைப்பாரா என்று தமிழக அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்பட்ட நிலையில், சசிகலாவின் பேட்டி புஸ்வாணம் ஆகிவிட்டது.
அதிலும், 2017ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் சமாதியில் சபதம் செய்த சசிகலா பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்துத் திரும்பியதும், அதற்கு பிறகு நான்காண்டுகளுக்குப் பிறகு இன்றுதான் மீண்டும் ஆருயிர் தோழியின் சமாதிக்கு செல்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று சசிகலாவின் மருமகனும், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனுமான சுதாகரன், இன்று சிறையில் இருந்து வெளியாகும் நிலையில் சசிகலாவின் பேட்டி இன்று முக்கியத்துவம் மிகுந்ததாக பார்க்கப்பட்டது.
ALSO READ | ‘எம்ஜிஆர் மாளிகை’ ஆனது அதிமுக தலைமை அலுவலகம்: பொன்விழா ஆண்டில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அதிரடி
”ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா செல்வதால் எந்த தாக்கமும் இல்லை, இது ஒருசெயற்கையான பில்டப். ஒரு நாளைக்கு லட்ச கணக்கான பேர் ஜெயலலிதா நினைவிடம் செல்கிறார்கள். அந்த லட்ச கணக்கான பேரில் இவரும் ஒருவர் அவ்வளவே. சசிகலா நடிப்பிற்கு ஆஸ்கார் விருது வேண்டுமானால் கொடுக்கலாம், அதிமுகவில் இடம் கொடுக்க முடியாது” என்று முன்னாள் அமைச்சர் சற்று நேரத்திற்கு முன் சொன்ன செய்தி உண்மையாகிவிட்டதோ என்ற அளவில் தான் சசிகலாவின் பேட்டி அமைந்திருந்தது.
தலைவரும் அம்மாவும் தொண்டர்களுக்காகவே வாழ்ந்தவர்கள். தொண்டர்களையும், கழகத்தையும் அம்மாவும் தலைவரும் காப்பாற்றுவார்கள், 5 ஆண்டுகளாக மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை நினைவிடத்தில் இறக்கி வைத்துவிட்டேன் என்று சசிகலா சொன்னார். மேலும் இங்கிருந்து கிளம்புகிறேன் என்று சசிகலா குறிப்பிட்டதற்கு அவர் எழுச்சியுடன் மாநிலம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.
தலைவர் எம்.ஜி.ஆர் பாகுபாடு பார்க்கமாட்டார். தற்போது, தலைவரின் வழியை பின்பற்றி, ஒற்றுமையாக கட்சியினர் செயல்பட வேண்டும் என்று மட்டும் சொல்லி தனது பேட்டியை முடித்துக் கொண்டார் சசிகலா.
Also Read | சொத்து குவிப்பு வழக்கு: சசிகலாவின் மருமகன் சுதாகரன் இன்று விடுதலை..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR