ஓபிஎஸ் என்னுடைய பழைய நண்பர்! இபிஎஸ்ஸுக்கு கிடைத்திருப்பது தற்காலிக வெற்றிதான் -டிடிவி தினகரன்

உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்பது எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிக கிடைத்திருக்கும் வெற்றி மட்டும் தான் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.  

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 23, 2023, 02:22 PM IST
  • இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வானது செல்லும்.
  • எடப்பாடி பழனிசாமி வசம் இரட்டை இலை சின்னம் இருந்தால் பலவீனப்படும்.
  • ஓபிஎஸ்ஸை அமமுகவில் இணையுமாறு அழைக்க மாட்டேன்.
ஓபிஎஸ் என்னுடைய பழைய நண்பர்! இபிஎஸ்ஸுக்கு கிடைத்திருப்பது தற்காலிக வெற்றிதான் -டிடிவி தினகரன் title=

புது டெல்லி: இன்று, ஜூலை 11 ஆம் தேதி அன்று நடைபெற்ற பொதுக்குழு சட்டத்திற்கு உட்பட்டு நடைபெற்றது என்றும், அதன் மீது எந்த விதமான உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை என்றும், தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் முடித்து வைக்கப்படுவதாகக் கூறி ஓ. பன்னீர்செல்வத்தின் மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன்மூலம் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வானது செல்லும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்துஅமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர், "உச்ச நீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்திருப்பது தற்காலிக வெற்றிதான். இந்த தீர்ப்பு ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றியை தராது. வேண்டுமானால் 5 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற வழி வகுக்கும். எடப்பாடி பழனிசாமி வசம் இரட்டை இலை சின்னம் இருந்தால் அது அ.தி.மு.க வை மேலும் பலவீனப்படுத்தும்.

நீதிமன்றங்களையும் பாஜக தான் இயக்குகிறதா?
பொதுக்குழு குறித்து மேல்முறையீடு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தர்ம யுத்தம் 1ல் ஓபிஎஸ் வெற்றி பெற்றார். தற்போது அவர் நடத்தும் தர்மயுத்தத்தில் சிறு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2017 ஏப்ரல் மாதத்திலிருந்தே பாஜக தான் அதிமுகவை இயக்குகிறது. அதேபோல நீதிமன்றங்களையும் பாஜக தான் இயக்குகிறதா என்பதை நான் கூற முடியாது.

மேலும் படிக்க: அதிமுக இரட்டை தலைமை விவகாரம்: ஈபிஎஸ் வென்றார்... ஓபிஎஸ் என்ன ஆவார்? - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

ஓபிஎஸ் என்னுடைய பழைய நண்பர்
தீர்ப்பில் பின்னடைவை சந்தித்ததால் ஓபிஎஸ்ஸை அமமுகவில் இணையுமாறு அழைக்க மாட்டேன். அது மனிதத் தன்மையும் அல்ல. ஓபிஎஸ் என்னுடைய பழைய நண்பர். அவர் என்ன செய்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம். இந்த தீர்ப்பு எங்களை எதுவும் பாதிக்காது.

இபிஎஸ்ஸிடம் இரட்டை இலை சின்னம் இருந்தால் மட்டும் ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று விடுவார்களா? என்று கேள்வியும் எழுப்பினார். 

சீமான் ஜாக்கிரதையாக பேச வேண்டும்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக வெற்றி பெறும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் பல முறைகேடுகள் செய்வார்கள். கமலஹாசன் பேசுவதையெல்லாம் காமெடியாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதை சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ளக் கூடாது . அவர் நடிகராக இருந்து அரசியல்வாதியாக அவதாரம் எடுத்துள்ளார். தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ளும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஜாக்கிரதையாக பேச வேண்டும்.

மேலும் படிக்க: நீதிமன்றத்தில் ஆஜர் ஆன முக அழகிரி! விசாரணை 6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

மக்களவை தேர்தல்
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமரை உருவாக்கும் அணியில் அமமுக அங்கம் வகிக்கும். தனியாக களம் காணவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ஆளுநருக்கு இது அழகல்ல
ஆளுநர் ஆளுநராக செயல்பட வேண்டும், அவர் பேசும் பேச்சு ஆளுநருக்கும் அல்ல, ஆர்என் ரவிக்கும் அழகல்ல. அவர் மத்திய அரசின் பிரதிநிதி அதனால் அப்படி பேசுகிறார். ஆளுநர் பதவி என்பது தேவை இல்லை என்பதுதான் எல்லோருடைய நிலைப்பாடும். ஆனால் அந்த பதவி இருக்கும்போது ஆளுநரை மதித்துதான் ஆக வேண்டும். திமுக ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஆளுனரை மதித்துதான் ஆக வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இது அவர்களுக்கு தர்மசங்கடமான நிலை என்றார். 

மேலும் படிக்க: "எங்களை சீண்டினால் வெடிகுண்டு வைப்போம்" -முன்னாள் ராணுவ வீரர் சர்ச்சைப் பேச்சு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News