அதிமுக அம்மா அணி துணை பொது செயலாளார் தினகரன், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசினார்.
சபாநாயகர் தனபால் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்தும், ரத்து செய்யக்கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் சபாநாயகர் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் குடகில் உள்ள பேடிங்டன் சொகுசு ரிசார்ட்டில் தங்கி உள்ளனர். அவர்களை சந்திக்க தினகரன் நேற்றிரவு அங்கு சென்றார். அவர்களுடான சந்திப்பு முடிவடைந்துள்ளது. ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் தினகரன், அணியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது என தகவல் வந்துள்ளது.
#Visuals #TTVDhinakaran arrives at Paddington Resorts in Coorg where 18 MLAs supporting him are staying. pic.twitter.com/X4wdqHILK6
— ANI (@ANI) September 22, 2017