சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் இன்றைய தினம் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். அதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “மாண்டஸ் புயலால் சேப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் பெரிய பாதிப்பு இல்லை. ஒரு சில இடங்களில் மரங்கள் விழுந்தது அதனையும் மாநகராட்சி அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் உடனே சரி செய்து விட்டார்கள்.புயலுக்கு அரசு எடுத்த நடவடிக்கையை மக்கள் பாராட்டுகிறார்கள்” என்றார்.
தொடர்ந்து, உங்களுக்கு அமைச்சர் பதவி வழங்க உள்ளதாக தகவல் வருகிறதே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என தெரிவித்தார்.
முன்னதாக, உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரையில் இடம் கொடுக்க வேண்டுமென்று அமைச்சர்கள் முதல் மாவட்ட செயலாளர்கள்வரை பலரும் குரல் உயர்த்தினர். ஆனால் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கினால் ஏற்கனவே குடும்ப அரசியல் என்ற விமர்சனத்திற்கு வலு சேர்க்கும்விதமாக இருக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் கருதுவதாக தகவல் வெளியானது.
புயல்-மழையால் பாதிப்பு ஏற்படாதவகையில் #CycloneMandous-ஐ திட்டமிடலுடன் கையாண்டுள்ளது திராவிட மாடல் அரசு. புயல் அச்சத்திலிருந்து மீண்டுள்ள #ChepaukTriplicane மக்களுக்கு நம்பிக்கையளிக்க திருவல்லிக்கேணி வி.ஆர்.தெரு பகுதியினருக்கு இன்று அரிசி-மளிகை-பெட்ஷீட் போன்ற பொருட்களை வழங்கினோம். pic.twitter.com/siHZELBPVP
— Udhay (@Udhaystalin) December 11, 2022
ஆனால், உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கியே தீரவேண்டும் என கட்சியினர் மட்டுமின்றி குடும்பத்தினரும் வலியுறுத்துவதால் அதுதொடர்பான தீவிர யோசனையில் ஸ்டாலின் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் வரும் 14ஆம் தேதி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவிருப்பதாகவும், அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் சமீபத்தில் பேச்சு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ