Vijay Speech | விஜய் தெறி..தெறி ஸ்பீச்..! பாஜக, நாதக, திமுக, அதிமுக எல்லாத்துக்கும் ஒரே அடி

Vijay Speech Tamil | விக்கிரவாண்டி தவெக மாநாட்டில் நடிகர் விஜய், கட்சி கொள்களை வெளியிட்டு தமிழ்நாடு அரசியலுக்கு தேவையான பாயிண்டுகளை துல்லியமாக பேசினார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 27, 2024, 07:41 PM IST
  • தவெக மாநாட்டில் நடிகர் விஜய் பேச்சு
  • பாஜக கொள்கை எதிரி, திமுக அரசியல் எதிரி
  • பெரியார், அம்பேத்கர் வழியில் தவெக பயணிக்கும்
Vijay Speech | விஜய் தெறி..தெறி ஸ்பீச்..! பாஜக, நாதக, திமுக, அதிமுக எல்லாத்துக்கும் ஒரே அடி title=

TVK Conference Vijay Speech | நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் நடத்தினார். திராவிட கட்சிகளான திமுக, அதிமுகவுக்கு சவால் விடும் வகையில் மாநாட்டை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தியிருக்கிறார். இந்த மாநாட்டில் முதன்முறையாக தவெக (TVK) கட்சியின் கொள்கைகளையும், வழிகாட்டிகளையும் அதிரடியாக அறிவித்தார். பெரியார், அம்பேத்கர், காமராஜர், அஞ்சலையம்மாள், வேலூநாச்சியார் ஆகியோரை கொள்கை வழிகாட்டிகளாக தவெக ஏற்றுள்ளது என்றும், திருவள்ளுவர் கூறிய பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்ற அடிப்படையில் சாதி, மதம், பேதம், இனம் என எந்த வேறுபாடுகளும் இல்லாமல் அனைவரும் சமம் என்ற கொள்கையோடு தமிழக வெற்றிக் கழகம் பயணிக்கும் என்றும் தவெக தலைவர் விஜய் அறிவித்தார்.

தவெக தலைவர் விஜய் பேசியதாவது " தவெக கட்சியின் கொள்கை வழிகாட்டி பெரியார். அவருடைய பெயரை கேட்டதும் ஒரு குரூப் பெயிண்ட் டப்பாவை எடுத்துட்டு வரும். அதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. பெரியார் எடுத்த கடவுள் மறுப்பு கொள்கையை நாங்கள் கையில் எடுக்க மாட்டோம். அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. யாரோட கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை. அண்ணா கூறிய ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற கொள்கையை கடைபிடிக்கப்போகிறோம். அதன்படி, பகுத்தறிவு, சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம் என்ற கொள்கையை ஏற்றுக் கொண்டு அதன் வழி பயணிக்கிறோம். நேர்மையான நிர்வாகத்துக்கு வித்திட்ட காமராஜர், சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்க பாடுபட்ட சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் வழிகாட்டியாக ஏற்கிறோம். வேலூநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோர் தவெக கட்சியின் வழிகாட்டி" என அறிவித்தார். 

மேலும் படிக்க | தவெக மாநாடு | 7 மணி கெடு.. காவல்துறை முக்கிய மெசேஜ், பரபரக்க மேடைக்கு வந்த விஜய்

" பிறப்பை வைத்து ஏற்றதாழ்வுகளை உருவாக்கும் வர்ணாசிரமம் கொள்கைக்கு எதிராக தவெகவின் கொள்கை எதிரி. சாதி, மத, பிளவுவாத அரசியலுக்கு எதிராக தவெக களமாடும். எந்த சூழ்நிலையிலும் தமிழ்நாட்டில் மத பிளவுவாத அரசியலை தவெக அனுமதிக்காது. கொள்கை கோட்பாடுகளின்படி மத அரசியலை முன்னெடுப்பவர்கள் கொள்கை எதிரிகள். இங்கு திராவிட மாடல் என மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் முகமூடிகள் நம்முடைய அரசியல் எதிரிகள். ஊழல் செய்து கொண்டு அண்ணா, பெரியார் பெயரில் குடும்ப அரசியலை செய்து கொண்டு இருப்பவர்கள் நம்முடைய அரசியல் எதிரிகள். இப்போது ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் கபவேடதாரிகள். அவர்களின் போலி முகமூடிகளை தவெக கிழித்தெறியும். இனியும் இந்த மோடிமஸ்தான் வேலைகள் எல்லாம் தமிழ்நாட்டில் எடுபடாது" என ஆக்ரோஷமாக பேசினார் விஜய்.

எல்லா வழிகளிலும் யோசித்து தான் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்திருப்பதாக கூறிய விஜய், இந்த கொள்கை அறிவிப்பே தவெக எதிரிகளை அடையாளம் காட்டும். அவர்களாக வந்து அம்பலப்படுவார்கள் என்றும் தவெக தலைவர் விஜய் தெரிவித்தார். மேலும், ஊழலை ஒழிக்க தவெக பாடுபடும் என அவர், பிளவுவாத அரசியல் வெளிப்படையாக தெரிந்த ஒன்று, மதம்பிடித்த யானை அது கண்ணுக்கு தெரிந்த ஒரு எதிரி. இன்னொரு எதிரி யாரென்றால் ஊழல் செய்துகொண்டு முகமூடி அணிந்திருக்கும் கபடதாரிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு முகமூடி தான் முகமே. அவர்களையும் தவெக வீழ்த்தும் என விஜய் தெரிவித்தார். மேலும், 2026 ஆம் ஆண்டு கூட்டணி அமைத்து தவெக போட்டியிடும் என்றும் பெரும்பான்மை கிடைத்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்கப்படும் எனவும் அறிவித்தார். விகிதாச்சார இட ஒதுக்கீடு வேண்டும் என்றும் நடிகர் விஜய் வலியுறுத்தியுள்ளார். 

தமிழ்நாட்டில் இருக்கும் மற்ற கட்சிகளைப் போல் பத்தோடு பதினொன்றாக தவெக இருக்காது என்றும், உண்மையாக மக்களுக்கு தேவையான திட்டங்கள் தவெக அறிவிக்கும் என்றும் விஜய் கூறினார். இந்த பேச்சில் பாஜக, அதிமுக, நாதக, திமுக என எல்லா கட்சிகளையும் நேரடியாகவே தாக்கிப் பேசினார் விஜய். நடிகர் விஜய்யின் அரசியல் கன்னிப் பேச்சு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. 

மேலும் படிக்க | தவெக மாநாட்டு திடலை சுற்றி சிகரெட் பீடி விற்பனை ஜோர், மது பாட்டிலோடு கும்மாளம்

மேலும் படிக்க | தவெக மாநாட்டில் விஜய் இன்று பேசப்போகும் 5 முக்கியமான விஷயங்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News