நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி மாலை 4 மணிக்கு விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான குழுவினர் முழுவீச்சில் செய்து கொண்டிருக்கின்றனர். முதல் மாநாட்டுக்கு பந்தல் அமைப்பதற்கான கால்கோள் விழா அக்டோபர் 4 ஆம் தேதியான இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து மாநாட்டுக்கு பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில், நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழக தொண்டர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
மேலும் படிக்க | விஜயதசமி சிறப்பு பேருந்து அறிவிப்பு, ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?
அதுவும் அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா, தொண்டர்கள் மத்தியில் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தையான ’இது ராணுவ கட்டுப்பாடு இயக்கம்’ என்ற வார்த்தையை நடிகர் விஜய்யும் தன்னுடைய கடிதத்தில் பயன்படுத்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு தொண்டர்களை அழைத்திருக்கிறார். நடிகர் விஜய் எழுதியிருக்கும் கடிதத்தில், "தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கான கால்கோள் விழா நடந்திருக்கிறது. இந்த முதல் மாநாடு நம் கழகத்தின் அரசியல் கொள்கை பிரகடன மாநாடு. அந்த மாநாட்டில் பொறுப்பான குடிமகனாகவும், முன்னுதாரணமாகவும் கழகத்தினர் இருக்க வேண்டும்.
மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கி, மாநாட்டில் பங்கேற்பது வரை நம் கழகத்தினர் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இயங்குவர் என்பதை இந்த நாடும், நாட்டு மக்களும் உணர வேண்டும், நாம் உணர வைக்க வேண்டும். கொண்டாட்டம் இருக்கலாம், குதூகலம் இருக்கலாம். ஆனால் ஓரிடத்தில் கூடினால் கட்டுப்பாடு மிக்கதாக மட்டுமில்லாமல் பக்குவம் நிறைந்ததாக இருக்கும் என்பதை நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும். இவர்களுக்கு அரசியல் தெரியுமா?, மாநாடு என்றால் என்னவென்று தெரியுமா? என்றெல்லாம் கேட்கிறார்கள். இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டி நாம் பேருக்கு ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்ல என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
வேகமாக இருப்பதைவிட விவேகமாக இருக்க வேண்டும், எதார்த்தமாக இருப்பதை விட எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். ஜெயலலிதா எப்போது பேசினாலும், பிரச்சாரதை மேற்கொண்டாலும் அதிமுகவை ராணுவ கட்டுப்பாடு கொண்ட இயக்கம் என்ற சொல்வார். இப்போது அந்த வார்த்தையை தன்னுடைய கடிதத்தில் பயன்படுத்தி தன்னுடைய கட்சி நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியிருக்கிறார் நடிகர் விஜய்.
முதலில் செப்டம்பர் 23 ஆம் தேதி மாநாடு நடத்த விஜய் திட்டமிட்டிருந்தார். இதற்காக காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில், பல்வேறு நிபந்தனைகளுடன் மாநாடு நடத்தவும் காவல்துறை அனுமதி வழங்கியது. ஆனால், அந்த நேரத்தில் மாநாடு நடத்துவதற்கான பணிகள் எல்லாம் முடிக்க முடியாது, காவல்துறையினரின் கட்டுபாட்டுகளை நிறைவேற்றுவதில் சிரமம் என்பதை உணர்ந்த விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு எந்த பிரச்சனையும் இல்லாமல் நடக்க வேண்டும் என்பதற்காகவே அக்டோபர் 27 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். அவரை பொறுத்தவரை இந்த மாநாடு சிறப்பாகவும், எந்த பிரச்சனையும் இல்லாமலும் நடக்க வேண்டும். அதற்காகவே ராணுவ கட்டுப்பாடுடன் ரசிகர்கள் நடந்து கொள்ள வேண்டும் என முன்னெச்சரிக்கையாக அறிக்கை விட்டிருக்கிறார்.
மேலும் படிக்க | விஜய் அரசியலுக்கு வருவதை மறுக்க மாட்டோம் - பாஜக எச்.ராஜா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ