பெங்களூரு: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆருயிர் தோழி சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கு தொடர்பாக கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரச் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார் சசிகலா நடராஜன்.
சில நாட்களுக்கு முன்னதாக அவருக்கு உடல்நிலை மோசமானதை அடுத்து சிகிச்சைக்காக பெங்களூரூ விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.
அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சசிகலா (Sasikala) கடந்த 27-ந்தேதி விடுதலையானார்.
Expelled AIADMK leader VK Sasikala discharged from Victoria Hospital in Bengaluru, Karnataka. pic.twitter.com/F0WgizflVD
— ANI (@ANI) January 31, 2021
அன்று விக்டோரியா அரசு மருத்துமனைக்கே சென்று சிறைத்துறை அதிகாரிகள் விடுதலை செய்ததற்கான ஆவணங்களை வழங்கினார்கள்.ஆனால் கொரோனா தொற்றுக்காக மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
Also Reaad | அன்னையான முன்னாள் முதலமைச்சர் AMMA, ஜெயலலிதா ஆலயம் வழிப்பாட்டிற்காக திறப்பு
தற்போது கொரோனா (Corona) பாதிப்பில் இருந்து முழுமையாக குணம் அடைந்தார். விக்டோரியா மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலாவை அவரது சகோதரர் திவாகரன், அ.ம.மு.க. பொதுச்செயலா ளர் டி.டி.வி. தினகரன், இளவரசியின் மகன் விவேக், திவாகரன் மகன் ஜெய் ஆனந்த், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் அழைத்து சென்றனர்.
சசிகலா கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணம் அடைந்தாலும் ஒரு வார காலத்திற்கு தனிமைப்படுத்திக் கொள்ளவிருக்க்கிறார். அதற்காக, பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டில் சசிகலா தங்கி ஒரு வாரம் தங்குவதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
ALSO READ: சக்கர நாற்காலியில் மருத்துவமனைக்கு செல்லும் சசிகலாவுக்கு Covid-19?
சசிகலாவை பார்ப்பதற்காக ஏராளமான AMMK கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் ஆஸ்பத்திரி முன்பு திரண்டிருந்தனர். அவர்களை பார்த்து கையசைத்தபடியே சென்றார் சசிகலா .
அடுத்த வாரத்தில், அநேகமாக 7-ஆம் தேதியன்று சசிகலா சென்னைக்கு செல்லலாம் என கூறப்படுகிறது. சசிகலா தமிழகத்திற்கு வந்தபிறகு, அரசியலில் என்ன மாற்றம் வரும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Also Read | சசிகலாவின் உயிருக்கு ஆபத்து: திவாகரன் கிளப்பிய சந்தேகத்தால் பரபரப்பு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR